கிருமி

30/01/2010

ஆலேலூயா…… ஆளே இல்லியா

சென்னை முகப்பேர் பகுதியை அடுத்து அமைந்துள்ளது நொளம்பூர் பகுதி.  மதுரவாயல், முகப்பேர், நெற்குன்றம் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளது இப்பகுதி.  நொளம்பூர் கிராமம் என்று குறிக்கப்படும் இப்பஞ்சாயத்து பகுதியில் சில ஆண்டுகளாக பெரிய அளவில் கிறித்துவ மதமாற்ற மோசடி நடந்து வருகிறது.  சில ஆண்டுகள் முன்பு வரை, இப்பகுதி ஒரு கிராமமாகவே இருந்தது.  பின்னர் டிஏபிசி, விஜிஎன் போன்ற அடுக்கக கட்டுமான நிறுவனங்கள் இங்கு அடுக்கக வீடுகள் கட்டித்தர ஆரம்பித்து, இப்போது பெரிய அளவில் அங்கு அடுக்ககக் குடியிருப்புகள் ஆயிரக்கணக்கில் முளைத்து விட்டன.  மதமாற்றத்தில் ஈடுபடும் கிறித்தவக் கும்பல்கள் ஆங்காங்கு சர்ச்சுகளை நிறுவி, பெரிய அளவில் மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றன.  நொளம்பூரில் பூர்விகமாக குடியிருந்தவர்களும், அங்கு இடையில் வந்தேறியவர்களும் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமலேயே வெகுகாலமாக இருந்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்புதான் அல்லேலுயா கும்பல்களின் ஆள் பிடிக்கும் பணி தொடங்கியது.  அப்போது தான் தற்செயலாக அடுக்கக வீடுகளும் முளைக்க ஆரம்பித்தன.  இப்பகுதியில் டிஏபிசி என்னும் அடுக்கக கட்டுமான நிறுவனம் (கிறித்தவருக்கு சொந்தமானது) மட்டும் மூவாயிரத்து ஐநூறு முதல் நான்காயிரம் பிளாட்டுகள் வரை சமீப ஆண்டுகளில் கட்டிக் கொடுத்துள்ளது, எனில் எத்தனை பேர் அங்கு வேலை பார்த்திருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.

இங்கிருந்த பாமர மக்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்பும் அடுக்ககக் கட்டுமான நேரத்தில் கிடைத்தது.  இங்கிருந்த பாமர மக்களோ படிப்பறிவில்லாதவர்கள், அவர்களுக்கு தற்செயலாக அமைந்த வாய்ப்புகளைப் பாருங்கள்.  கட்டிட வேலையில் ஈடுபடுபவர்களுக்கு (பெரும்பாலானோர் ஆந்திரர்கள்) வடை, தேனீர், சாப்பாடு விற்றனர், தண்ணீர் விற்றனர், செல்பேசிகளுக்கு ரீசார்ஜ் அட்டைகள் விற்றனர்.  கட்டிடங்கள் கட்டி அடுக்கங்களில் மக்கள் குடியேறியதும் வேலை வாய்ப்பு இன்னும் பெருகியது.  குடி நீர் கேன் விற்பனை, காவலாளி வேலை, வீடுகளை சுத்தம் செய்யும் வேலை, பால் மற்றும் பால் பாக்கெட் விற்பனை, எலெக்டிரீசியன், பிளம்பர், கார்கள் சுத்தம் செய்ய, தினசரி செய்தித்தாள் போடுதல், தச்சர், வண்ணம் பூசிகள், கருமான்கள், குப்பை அள்ளும் ஒப்பந்தங்கள், கட்டிட வேலை, மின்னாள், ஓட்டுனர், ஆட்டோத் தொழில் என சம்பாதிக்க பல வழிகள் பிறந்தன.  மக்களும் ஓரளவு வசதி பெற்றனர்.

கணிசமான அளவில் மதமாற்றமும் நடைபெற்று முடிந்த நிலையில் நிகர லாபம், கிறித்துவ அமைப்புகளுக்கும், அவற்றை நடத்துபவர்களுக்கும் கிடைத்தது.  ஆம், இப்போது வசதியாக இருக்கும் மதம் மாறிய சமீபத்திய கிறித்துவர்களைக் கை காட்டி, பணத்தாசை காட்டி மற்றவர்களையும் மதம் மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.  மதம் மாறினார்களாம், ஏசு நல்வழி காட்டினாராம்.  எப்படி கதை?  காக்கை அமரப் பலாப்பழம் விழுந்த கதை தான்.  இந்த கிறித்துவ அமைப்புகளை நடத்துபவர்கள் அயல் நாடுகளிலிருந்தும் மிஷன்களில் இருந்தும் கொழுத்த லாபம் சம்பாதித்தனர், இது விமரிசையாகத் தொடர்கிறது.

சில சமயம் நள்ளிரவில் கூட பேயோட்டுதல், புனித ஆவிகளின் மிட்நைட் மசாலா என ஒரே கூக்குரல் மயமாக இருக்கிறது நொளம்பூர்.  இவர்கள் பிளிறும் ஆலேலுயா………. சத்தம் ஆளே இல்லியா என்று ஆள்பிடிப்பதை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

Advertisements

29/01/2010

அரசியலில் பந்தாடும் கேப்டன்

Filed under: அரசியல் — கிருமி @ 10:51 முப
Tags: ,

நம் அரசியல்வாதிகள் திருந்தவே மாட்டார்கள்.  விஜயகாந்தின் புதிய தொலைக்காட்சியின் பெயர் கேப்டன் டிவியாம்.  லோகோவை அறிமுகப்படுத்துகிறார் ஆங்கிலத்தில்.  லோகோவில் ‘கேப்டன்’ அருகில் பந்து போன்ற உருவம் தெரிகிறது, அசப்பில் பந்து மாதிரியே தான் இருக்கிறது.  நானும் அரசில் விளையாட்டில் இருக்கிறேன் என்று சொல்கிறார் போலும்.  அவரது கட்சியின் வலைத்தளம் முழுதும் ஆங்கிலமே நீக்கமற நிறைந்திருக்கிறது.  தே.மு.தி.க மட்டுமல்ல பெரும்பாலான அரசியல் கட்சிகளின் வலைத்தளங்களில் ஆங்கிலமே கோலோச்சுகிறது.  ம.தி.மு.க தளத்தில் தமிழுக்கு ஓரளவு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.  இணையத்தமிழ் பயனாளர்கள் அனைவரும் ஒருங்குறி எழுத்து வகையைப் பாவிக்கும் போது ஏன் இந்த இழவெடுத்த அரசியல்வாதிகள் ஆங்கிலத்தையும், தமக்கென ஒரு எழுத்துருவையும் கட்டி அழுகிறார்கள் என்று தெரியவில்லை.  தமிழக அரசின் இணைய தளங்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை, ஏகப்பட்ட எழுத்துருக்கள்.  இந்த லட்சணத்தில் செம்மொழி மாநாடு வேறு.

தமிழ், தமிழன் என்று சொல்லிக்கொண்டே தமிழனையும், தமிழையும் கருவறுப்பதில் நம் அரசியல்வாதிகள் அப்படி என்ன இன்பம் காண்கிறார்களோ?

27/01/2010

அதலக்காய்

Filed under: பொது — கிருமி @ 8:25 முப
Tags: , , ,

அதலக்காய் எங்கள் ஊர்ப்பக்கம் பிரபலமான ஒரு காய் வகையாகும்.  கசப்புச் சுவையுடையது, ஆனால் பாகற்காய் போன்று அதிக கசப்பல்ல, நடுத்தரமான கசப்பு.  மழைக்காலத்தில் மட்டும் கிடைக்கும் இது ஒரு களைச்செடி, தரையில் படரும் கொடி வகையாகும். உள்ளே வெண்டைக்காய் விதைகளைப் போன்று விதைகள் இருக்கும்.  மழை சமயத்தில் நான் ஊருக்குப் போனால் தினமும் அதலக்காய் பொரியல் எனக்காக செய்வார்கள்.   இரு புறமும் உள்ள காம்புகளைக் கிள்ளி எடுத்து விட்டு உப்பிட்டு வேகவைத்து, வாணலியில் போட்டு வதக்கினால் பொரியல் தயார்.  அதலக்காய் புளிக்குழம்பும் ஜோராக இருக்கும்.  மோர்மிளகாய் போல வற்றல் போட்டு வைத்துக் கொள்வதும் உண்டு, அதன் சுவையே தனி.   மற்ற காய்களைப் போல பிஞ்சிற்கும், முற்றலுக்கும் பெரிய அளவில் சுவை வேறுபாடு கிடையாது, கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருக்கும்.

யாரும் கேட்பாரின்றி வெகுசில காய்கறிக்கடைகளில் மட்டும் சல்லிசாகக் கிடைத்து வந்த அதலக்காய் இப்போது சந்தையில் கிலோ முப்பது, முப்பத்திரண்டு ரூபாய்க்கு பெரும்பாலான காய்கறிக்கடைகளில் கிடைக்கிறது.  களைச்செடியாகக் கருதப்பட்டு வந்த இக்காய், அனேகமாக இப்போது விளைவிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.

26/01/2010

மலையாளிகள்

Filed under: பொது — கிருமி @ 12:35 பிப
Tags: , ,

தமிழ் நாட்டின் எந்த ஊரை எடுத்தாலும் சரி அங்கு வரவர மலையாளிகளின் கொட்டம் சத்தமின்றி உச்சத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது. டீக்கடையில் ஆரம்பித்து பீக்கடை (கக்கூஸ் கான்ட்ராக்ட்) வரை இவர்களின் ஆக்கிரமிப்பு எல்லை மீறி விட்டது. ஊர் நாட்டிலிருந்து இங்கே வந்து ஒருத்தன் தொழில் செய்தால் பரவாயில்லை, மாமன், மச்சான், அண்ணன் தம்பி, சித்தப்பா, பெரியப்பா என எல்லோரையும் இங்கே இறக்குமதி செய்து விடுகின்றனர்.

மலையாளிகள் சிறந்த உழைப்பாளிகள் என்று சொல்வார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இவர்கள் சிறந்த உழைப்பாளிகள் எனில் ஏன் ஊரை விட்டு நாடோடிகளாய் அலைகின்றனர். கேரளாவில் ஏன் குறிப்பிடத்தக்க அளவில் தொழிற்சாலைகள் இல்லை? காரணம் இவர்களின் குள்ள நரித்தனமும் கம்யூனிசப் போக்கும் தான். அங்கே பருப்பு வேகாமல், இங்கே வந்து டேரா போட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் பிறவிக் குணமே குள்ள நரித்தனம் தான். போட்டுக் கொடுத்தல், வத்தி வைத்தல், மற்றும் சிலர் கூட்டிக்கொடுத்தலும் செய்தே முன்னேறுகின்றனர் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. எவ்வளவு நெருக்கமாக குடும்ப சகிதமாகப் பழகினாலும், சமயம் பார்த்து கழுத்தறுப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்களே தான். சமயம் பார்த்து தான் சுயரூபத்தைக் காட்டுவார்கள். தனக்கு இலேசாக ஒரு பங்கம் வரும் என்று தெரிந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காத கயவாளிகள் இவர்கள். “கொலையாளிய நம்பினாலும் மலையாளிய நம்பாதே” என்பது எவ்வளவு உண்மை என இவர்களுடன் நெருங்கிப் பழகிப் பார்த்தால்தான் தெரியும்.

சென்னையில் எந்த டீக்கடையைப் பார்த்தாலும் நாயர் டீக்கடை தான். “ஏண்டா உங்க ஊருலே பள்ளன் பறையனுங்களே கிடையாதா, எல்லாருமே மேசாதி நாயர் தானா” என்று தான் கேட்கத் தோன்றுகிறது. சென்னையில் எந்த சாதிக்காரன் மளிகைக் கடை வைத்தாலும் அவன் “நாடார்” ஆகி விடுவது போல, இவன்களும் டீக்கடை, ஹோட்டல் வைத்தால் நாயர் ஆகி விடுகின்றனர் போலும்.

வளைகுடா நாடுகளில் இவர்கள் செய்யும் அட்டூழியத்துக்கு அளவே கிடையாது. கூட வேலை பார்க்கும் சக தொழிலாளியைப் பற்றி – அவன் அப்பாவியோ, எமகாதகனோ – மேலதிகாரியிடம் இல்லாததும் பொல்லாததுமாகப் போட்டுக் கொடுத்து மட்டம் தட்டியே இவர்கள் முன்னுக்கு வந்து விடுகின்றனர். இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையைப் பற்றி சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு மலையாளியும் தங்களுக்குள் என்னதான் சண்டை போட்டுக் கொண்டாலும் பிரச்சனை என்று வந்து விட்டால் சேர்ந்து கொள்வார்கள்.   நம்மவர்களுக்கு ஒற்றுமை என்றால் என்ன என்றே தெரியாது.   தமிழன் என்றால் இவர்களுக்கு ரொம்பவே இளக்காரம் வேறு. இவர்களின் தொல்லை தாங்காமல் நம்மவர்களும் இவர்களைப் போலவே ஆரம்பித்து விட்டனர். ஆனாலும் தமிழனுக்கு மலையாளிகளின் சாமர்த்தியம் வருமா என்ன?  போட்டுக் கொடுப்பதில் மலையாளத்தான்களிடம் போட்டி போட முடியுமா என்ன?   நம் “அறிவாளி” பச்சைத் தமிழர்கள் நல்லபடியாக தவறு செய்தவனைக் காட்டிக் கொடுப்பார்கள். இதில் கொடுமை என்ன எனில் காட்டிக் கொடுப்பவன், காட்டிக் கொடுக்கப்படுபவன் இருவருமே “பச்சத் தமிழன்கள்” தான். அதை அங்கே இருக்கும் மலையாளிகள் சொல்வர் : “மலையாளி கூட்டிக் கொடுப்பான், ஆனா தமிழன் காட்டிக் கொடுப்பான்”. காட்டிக் கொடுப்பது என்பது கூட்டிக் கொடுப்பதை விட ரொம்ப துரோகம் என்பது இவர்களின் சித்தாந்தம்.

டீக்கடைகள், சிற்றுண்டி உணவு விடுதிகள் முதல் நட்சத்திர உணவு விடுதிகள் வரை இவர்களின் “மல்லு ராஜ்யம்” கொடி கட்டிப் பறக்கிறது. “நாயர் கடை சாய் டேஸ்டே தனி” என்று சொல்லி தேனீரை சப்புக் கொட்டி உறிஞ்சும் போது கொஞ்சம் அந்த நாயர் டீ போடும் இடத்தை கவனியுங்கள், வாந்தியே வரும்.  அவ்வளவு சுத்தமின்மை.

சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் கழித்து மீண்டும் பல நாட்டு வெள்ளையர்கள் பாரதத்தில் வந்து கடை விரித்துக் கொண்டிருக்கும் அதே சூழல் தான் இங்கே தமிழகத்தில் மலையாளிகள் மூலம் விரிந்து கொண்டிருக்கிறது.

போதாக்குறைக்கு, இவன்கள் இப்போது மலையாளிகள் என்று சொல்லிக்கொள்வதில்லை. தமிழன் தான் நான் என்று சாதிக்கின்றனர்.  இவர்கள் இப்போது தமிழர்கள் வீட்டில் சம்பந்தம் செய்யும் அளவுக்கு வந்து விட்டனர்.  கிட்டத்தட்ட இதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்ற நிலை.

பார்ப்பன ஆதிக்கத்தை விரட்டுகிறோம் என்று வரிந்து கட்டி எழுபவர்களுக்கு அண்டை மாநிலத்திலிருந்து வரும் ஆதிக்கவாசிகள் பற்றி தெரியவில்லையா? சமீபத்தில் மலையாள சங்கம் போன்ற ஏதோ ஒரு அமைப்பு, மலையாளிகள் தமிழகத்தில் அதிகம் இருப்பதால் மலையாள பண்டிகைகளுக்கு மலையாளத்தான்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் தமிழகத்திலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. தமிழகம் மலையாளிகளின் கூடாரமாகி விட்டது என்று எம்.ஜி.ஆர் முதல்வராய் இருக்கும் போது தீனமாக ஒருவர் கூக்குரலிட்டார், இன்று அவர் ஆட்சி தான் நடைபெறுகிறது. இப்போது தமிழக அரசுப் பணிகளில் கூட இந்த மலையாளத்தான்களின் ஆதிக்கம் மேலோங்க ஆரம்பித்து விட்டது.   இவருக்கு இதெல்லாம் கண்ணில் படவில்லையா?

இனமான உணர்வுப் போராட்டங்கள் எல்லாம் நடக்கின்றனவே? இவையெல்லாம் இனமான உணர்வுப் போர்களா அல்லது ஈனமானப் போர்களா? மராட்டியர்களின் இன உணர்வில் கால் பங்கு கூட இல்லையா தமிழனுக்கு. வந்தாரை வரவேற்பது நமது பண்பாடு தான், ஆனால் அதற்காக ஒண்ட ‌வந்த பரதேசிக்கு நாம் உடுத்தி இருக்கும் கோவணத்தை தாரை வார்த்துக்கொண்டிருக்கிறோம். சென்னையில் இருக்கும் மலையாளி டீக்கடைகள்,சிற்றுண்டிசாலைகளையும் இங்கு வேலையின்றி அலையும் மக்களையும் கொஞ்சம் தொடர்புபடுத்திப் பாருங்கள், விளங்கும். மண்ணின் மைந்தர்களுக்கு முதலில் இருக்க இடமும், உடுக்க உடையும், உணவும் கிடைத்தபின் வந்தாரை வரவேற்று சம்பந்தம் பேசலாமே?

பரதேசிகளுக்கு இருக்க இடம் கொடுத்தால் படுக்க பஞ்சணை கேட்பது போல், இவர்களை இவ்வளவு தூரம் வளர விட்டதால் பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்கக் கூடாது என்று வழக்குப் போடுகின்றனர். இதைத் தட்டிக் கேட்டால் நாம் பிரிவினைவாதிகள் என்று நம்மவர்களே பொங்கி எழுவர், ஒன்றே பாரதம் என்பர். கொஞ்சம் கேரளத்தில் போய் இப்படி ஏதாவது கொடி தூக்கிப் பாருங்கள் தெரியும் சேதி….

இன்று தினம் தனித்தமிழன் தேனீர் அருந்தவும், உணவுக்கும் மலையாளிகளின் கையைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். மலையாளிகளின் மரியாதைக் குறைவான பேச்சும், ஏளனமாக தேனீர் குவளையைக் கூட சரியாக கழுவாமல் தரும் போக்கும் எல்லை மீறுகின்றன. அலட்சியமான பதிலும், மீதி காசைக்கூட கல்லாவிலிருந்து எடுத்து கையில் தராமல் பிச்சை இடுவது போல மேசையின் மீது எள்ளலாக போடுவதும் இவர்களின் பாணி.

எவரையும் ‘நீ வா போ’ என்றே விளிக்கும் இவர்களின் போக்கை எவரும் கண்டு கொள்வதே இல்லை. கேட்டால், எங்கள் ஊரில் இதுதான் வழக்கம் என்று பதில். அது அவர்கள் ஊரில்தானே, இப்போது இவன் இருப்பது தமிழ் நாட்டில் தானே ஐயா? இதை எல்லாம் தட்டிக் கேட்க ஆளில்லையா என்ன?

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் எல்லாத் துறைகளிலும் காலூன்றி விட்டனர். இவர்களின் குள்ள நரித் திறமையே அதற்குக் காரணம் என்றால் அது மிகையாகாது.

இவர்களுக்கும் ஒரு நாள் சோதனை வரும் எந்த பிரச்சினை வடிவிலாவது… அப்போது தெரியும் தமிழனுக்கு சொரணை எந்த அளவில் வளர்ந்திருக்கிறது என்று.

தமிழன் சுதாரிப்பானா?

======++++++======

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: