கிருமி

05/02/2010

இன்னொரு மலையாளத்தானின் கொழுப்பு.

Filed under: பொது — கிருமி @ 5:56 பிப
Tags: ,

தன் வீட்டு வேலைக்காரியை கறுத்து தடித்த தமிழச்சி எருமை என்று ஒரு பேட்டியில் பகிரங்கமாக சொல்லியிருக்கிறான் மலையாள நடிகன் ஜெயராம்.  எவ்வளவு திமிர்  பாருங்கள்,  போட்டுக் கொடுத்தும், காட்டிக் கொடுத்தும் பிழைப்பு நடத்தும் ஈனர்களுக்கு என்ன தெனாவட்டு பாருங்கள்.   தமிழச்சியைச் சொன்னான் என்பதை விட்டாலும், எப்படி தன் வீட்டு வேலைக்காரியை, ஒரு எளிய வசதியற்ற பெண்ணை பல்லாயிரம் பேர் காணும் ஊடகத்தின் நேர்காணலில் ‘எருமை’ என்று வாய் கூசாமல் சற்றும் மனிதாபிமானம் இன்றி சொல்லியிருக்கிறான்.  நான்கு பேர் முன்னால், அந்தப் பெண்ணின் காலைத்தொட்டு மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் இவனை.

ஒங்கள எல்லாம் பிஞ்ச செருப்ப பீயில முக்கி அடிக்கணும்டா.  தமிழன் ரொம்ப நாளைக்கு நல்லவனா இருக்க மாட்டான்.

Advertisements

01/02/2010

கதாநாயகன் கார்த்திக்

Filed under: பொது — கிருமி @ 9:00 முப
Tags:

கார்த்திக்

ஒரு தடவை கலை நிகழ்ச்சியொன்றுக்காக தமிழக திரைக்கலை நட்சத்திரங்கள் துபாய் வந்திருந்தனர்.  நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பார்வையாளர்கள் யார் வேண்டுமானாலும் மேடையேறி, அவர்கள் விரும்பிய நட்சத்திரத்தை அழைத்து, பாட, பேச, நடிக்கச்சொல்லலாம் என்று அறிவித்தனர்.

ஒரு பெண் பன்னிரண்டு முதல் பதினான்கு வயது இருக்கும், குழந்தைத்தனமாக இருந்தது.   அது  மேடையிலேறி கார்த்திக்கை அழைக்க, அவரும் வந்தார்.  வந்தவரிடம் அந்தப் பெண் கேட்டது என்னவென்றால், கார்த்திக் அந்தப் பெண்ணைப் பார்த்து காதல் வசனம் பேச வேண்டுமாம்.  அசந்து போன கார்த்திக் தனது வழக்கமான குழறல் பாணியில் வெகு நாகரீகமாக மறுத்தார்.  அப்பெண்ணிடம் வயதைக் கேட்டறிந்து விட்டு சொன்னார், ‘ஒன் வயசென்ன என் வயசென்ன, எம்பையன் வயசு கூட இல்லை, ஒன்னைப் பார்த்து நான் லவ் டயலாக் சொல்லணுமா, எம்பையன் வேணுமின்னா சொல்வான்’ நான் சொல்ல முடியாது’ என்று வெகு கண்ணியத்துடன் நடந்து கொண்டார்.

அவரை ஒரு குடிகாரன், போதைக் கிராக்கி என்று பலவாறாக பத்திரிகைகள் எழுதினாலும், அவர் உண்மையிலேயே ஒரு கதாநாயகனாகத்தான் அன்று தெரிந்தார்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: