கிருமி

17/03/2011

இந்திய விளம்பர தரக்கட்டுப்பாட்டு நிறுவனம்

Filed under: பொது — கிருமி @ 6:21 பிப
Tags: , ,

தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் தரக்குறைவான, ஆபாசமான, பெண்களை இழிவுபடுத்தும் விதத்திலான விளம்பரங்கள் கண்டு நொந்திருப்போம்.  குடும்பத்துடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்க முடியாத அளவு பல விளம்பரங்கள் வருகின்றன.  போலியாக பல வாக்குறுதிகள்.  கனவிலும் சாத்தியமற்றவற்றை தம் பொருட்கள் நடத்திக்காட்டுவதாக பல ஏமாற்று விளம்பரங்கள்.  இவற்றையெல்லாம் கண்டு மனம் எரிச்சலடையும்.  அதற்கு தீர்வு என்ன என்று தெரியாது நாமும் சகித்திருப்போம்.  அவற்றுக்கு குட்டு வைக்கும்படி ஒரு குறைதீர் அமைப்பு உள்ளது.  இதிலுள்ள இணையவழி புகார் அமைப்பு மூலம் இது குறித்து புகார் அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.  சிலர் இதன் மூலம் சில விளம்பரங்களை தடுத்து நிறுத்தியதாகவும், முறையான பதில் மின்னஞ்சல் வந்ததாகவும் தெரிகிறது.

இந்திய விளம்பர தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இணையதளம் :  http://www.ascionline.org/

மேலதிக தகவல்களும் இதில் உள்ளன.

தகவல் உபயம் : மிளகாய் வானொலி.  (மிளகாய் வானொலியில் வரும் சில விளம்பரங்களுக்கும் இதன் மூலம் புகாரளிக்கலாம் போலிருக்கிறது.)

இந்த அமைப்பின் உபயோகம் எத்தனை நாளுக்கு நல்லபடியாக இருக்கிறது என்று தெரியவில்லை.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதில் ஏற்கனவே பல குளறுபடிகள்.  அதுபோல் தான் இதுவும் ஆகுமா என்று பொறுத்திருந்தே பார்க்க முடியும்.

Advertisements

16/03/2011

முகப்பேரில் அலையும் அல்லேலுயா மாமாக்கள்

முகப்பேரை ஒட்டியுள்ள நொளம்பூர் பகுதியில் பெருவாரியான ஆந்திர கூலித் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் தனியார் நிறுவனங்கள் பல அடுக்ககக் கட்டுமானத்தில் ஈடுபட்டு வருகின்றன. உயர் மத்தியதரக் குடும்பங்களுக்கான பகுதியாக இது உருவெடுத்து வருகிறது. இப்பகுதியில் ஏற்கனவே கிறித்துவ மதமாற்ற மோசடிக்கும்பல்கள் தலைக்கு இவ்வளவு என்ற ரீதியில் ஆள்பிடிப்பு நடவடிக்கையில் இறங்கி பேரளவு மத மாற்றமும் நடந்து வருகிறது. இக்கும்பல்களின் சமீபத்திய இலக்கு, இங்குள்ள கூலித் தொழிலாளர்கள் தான். இவர்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு சென்று இயேசு மீட்க வருகிறார் என்று புளுகி வழக்கம் போல தங்கள் மதப்பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டனர். எரிகிற வீட்டில் பிடுங்கிய மட்டும் லாபம் என்று, கூலித் தொழிலாளர்களின் நலனில் எந்த மெய்யான அக்கறையும் காட்டாமல், மத மாற்றத்தை மட்டுமே குறியாக இவர்கள் இயங்கி வருகின்றனர்.

13/03/2011

தமிழ் திரட்டிகள்

Filed under: பொது — கிருமி @ 8:06 பிப

நெடு நாள் வலை நண்பர் ஒருவர் ஏன் திரட்டிகளில் என் வலைப்பூவை இணைக்கவில்லை என்று கேட்டிருந்தார். அது தேவையில்லை என்று நினைக்கிறேன். என் எண்ணங்களையும் அனுபவங்களையும் எழுதி வருகிறேன். திரட்டிகளில் இணைப்பதால் பெரிய நன்மைகள் எதுவும் இல்லை என்றுதான் எண்ணம்.

ஒரு முறை தமிழ்மணம் நான் சாதாரணமாக எழுதிய இடுகையை (இன்னொரு மலையாளத்தானின் கொழுப்பு) நீக்கியது. இவர்களுடன் நமக்கென்ன சங்காத்தம், என்ன அவசியம் என்று வெளியில் வந்து விட்டேன். மற்றொரு விடயம், நேரம், இதற்கெல்லாம் எனக்கு நேரமும் குறை, அதையெல்லாம் அலசி ஆய்ந்து கொண்டிருக்கும் பொறுமையும் குறைந்து விட்டது. ஒரு சிலர் தம் திரட்டிகளில் என் பதிவை பதிந்து கொண்டதாக மின்னஞ்சல் அனுப்பி உள்ளனர், அது வரை போதும், அவர்களுக்கு என் நன்றிகள்.

பிகு : (ஒருத்தரும் நம்ம தளத்துக்கு வர்றதில்லை, அதனால ஒன்னு ரெண்டுல இணைச்சிருக்கேன்.)

தமிழகத் தேர்தல் 2011

Filed under: அரசியல் — கிருமி @ 7:56 பிப

நேற்று தேமுதிக அலுவலகம் வழியாகப் போகும் போது கட்சியின் நேர்காணலுக்கு வந்திருந்தவர்கள் நூறடி சாலையில் வண்டிகளை நிறுத்தி விட்டு பரபரப்பாக அல்லாடிக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு தொகுதிகளில் ஜெயிப்பார்கள் என்று தெரியவில்லை.

எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி என்று பார்த்தால், அ.தி.மு.க கூட்டணி தேவலை போலத் தெரிகிறது. ஆனால் வைகோ, கம்யூனிஸ்டுகள் தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவாகவில்லை. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை போல் வைகோ கதை ஆகி விட்டது பாவம்.

கருணாநிதியின் சில சாகசங்கள்

• இலவசங்களை அளித்து மக்களை பிச்சைக்காரர்களாக்கியது
• லட்சங்கோடிகள் கணக்கில் ஊழல்
• ஈழத் தமிழர்களுக்கு பெருந்துரோகம்
• குடும்ப வாரிசுகள் அனைவரையும் அரசியலில் சம்பாதிக்க இறக்கியது
• இந்து வாக்குகளால் ஜெயித்து இந்துக்களை மட்டுமே மட்டந்தட்டிப் பேசி வருவது
• தமிழ், பாரம்பரியம், நாகரீகம் என்று இனிக்க இனிக்கப் பேசி அனைத்தையும் தன் குடும்பத் தொலைக்காட்சிகளில் சந்தி சிரிக்க வைப்பது
• சாதியை ஒழிப்பேன் சமத்துவம் வளர்ப்பேன் என்று பேசிக் கொண்டே பார்ப்பனர், பூணூல் என்று சாதித் துவேஷத்தை திணிப்பது
• இரண்டு மணி நேர உண்ணாவிரதம் போன்ற மலிவான அரசியல் நாடகங்கள்
• செம்மொழி மாநாடு போன்றவற்றால் மக்கள் பணத்தை வீணடித்து புகழுரைகளை வாரிக் கொட்டிக் கொண்டது
• குடும்ப உறுப்பினர்கள் / பினாமிகள் மூலம் அனைத்து துறைகளிலும் கால்பதித்து ஏகாதிபத்தியத்தை வளர்ப்பது
• சோனியாவின் காலை வருடி வருவது

இதெல்லாம் உதாரணங்கள் தான். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

திரும்ப கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் தமிழனுக்கு ஏழரை தொடரும் என்று தான் பொருள்.

08/03/2011

கூடிய விரைவில் தொடர்ச்சியாக எழுத உத்தேசம்

Filed under: பொது — கிருமி @ 9:54 பிப

கொஞ்ச நாளாகவே நிரம்ப வேலைகள், எழுத முடியவில்லை, தட்டச்சி வைத்ததைக்கூட சரிபார்த்து பதிவிட முடியவில்லை. இன்று கூட ஒருவர் மறுமொழியிட்டது கண்டு மிக்க மகிழ்ச்சி, அவருக்கு என் நன்றி.   கூடிய விரைவில் தொடர்ச்சியாக எழுத உத்தேசம்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: