கிருமி

01/10/2011

மக்களுக்கு மறதி, மந்தி(ரி)க்கு மனோவியாதி

திண்டிவனம், செப்.30: திண்டிவனம் தனியார் பள்ளி ஒன்றில் வெள்ளிக்கிழமையன்று பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுத புதுவை கல்வி அமைச்சர் வருவதாகப் பரவிய செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.

கேடு கெட்ட தேசமய்யா,  இது பொய்யோ மெய்யோ? பத்து கூட படிக்காத ஒருவர் கல்வி அமைச்சராய் வருவது இங்கு மட்டுமே சாத்தியம்.

வாச்சாத்தி தீர்ப்பு : தினமணி தலையங்கம் : தர்மம் வென்றது!

தாமதமானாலும்கூட நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

தாமதமாக நீதி வழங்கப்பட்டதற்கு மகிழத்தான் வேண்டும். இருந்தாலும் தாமதித்து வழங்கப்படும் நீதி, செய்யப்பட்ட அநீதிக்கு நேர்.

19 ஆண்டுகள் ஆனாலும் நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருப்பவர்களாகத் தமிழகப் பழங்குடி மக்கள் இருக்கிறார்கள் என்பதுதான். இந்த மக்களின் பொறுமைக்குத் தமிழகம் தலைவணங்க வேண்டும்.

இப்படித்தான் மும்பை மக்களும், குண்டு வெடித்தாலும் தளர மாட்டார்கள், உதவி செய்து கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே என்றெல்லாம் பாராட்டப்படுகின்றனர். இயற்கை சீற்றங்களிலிருந்து உடன் விடுபட்டு தன்னம்பிக்கையுடன் செயல்படும்போதோ, அமைதி காக்கும் போதோ பாராட்டலாம். ஆனால் மனித மிருகங்களின் கொடுமையை சகித்துக் கொண்டிருப்பது காயடிக்கப்பட்ட மனித உணர்வுகளையே காட்டுகிறது.

புது தில்லி, செப்.30: 2ஜி விவகாரம் குறித்த செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் தனக்கு ஞாபக மறதி உள்ளதாகத் தெரிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

மக்களுக்குத்தான் நியாபக மறதி. அரசியல்வியாதிகளுக்கு மனோவியாதி.

ஈரோடு, அக். 1: இந்தியாவில் நடைபெறும் விபத்துகளில் 80 சத அளவு இரு சக்கர வாகனங்களால் நடைபெறுகிறது என போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டத்தி்ல் தெரிவிக்கப்பட்டது.

இருக்கும் விதிமுறைகளை, லஞ்சம் வாங்காமல் காவல்துறை அமல்படுத்தினாலே போதும். வாகனங்களில் அளவுக்கு மீறிய பிரகாசத்துடன், தேவைக்கு மீறிய ஒளி வீச்சுடன் விளக்குகள் பொருத்தப்பட்டு வெளிவருகின்றன. இதையெல்லாம் அரசு கண்டு கொள்வதில்லை. பன்னாட்டு நிறுவனங்களை வரவேற்று பல்லைக் காட்டி, காலை நக்கி வரவேற்கும் அரசுகள் இதற்கெல்லாம் கட்டுப்பாடு விதிக்குமா என்ன? முன்பு வண்டிகளை ஆங்காங்கு சாவடிகளில் நிறுத்தி விளக்குகளின் மேல் பாதியில் கறுப்பு வர்ணம் பூசி அரசு எந்திரம் மறைத்து அரும்பணியாற்றியது. அதெல்லாம் பழங்கதையாகி விட்டது. வெளியில் போய் விட்டு உயிருடன் திரும்புவதே ஆச்சரியமாகி விடும் இனி.

Leave a Comment »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

தமிழில் மறுமொழி இடவும். தமிழில் உரையாடுவோம், எழுதுவோம். நன்றி.

Create a free website or blog at WordPress.com.