கிருமி

30/11/2011

இந்தியாவை விற்றுத் தொலையுங்கள்

சென்னை, நவ. 29: முல்லைப் பெரியாறு பிரச்னையில் நிலைமையை மோசமாக்கி வரும் கேரளத்துக்கு அறிவுரை வழங்குமாறு மத்திய அரசை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

புதுதில்லி, நவ.30: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி பிரதமர் மன்மோகன் சிங்கை வரும் டிசம்பர் 2ம் தேதி சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாருய்யா! அங்கன, ஒரு பிரச்சினைன்னதும் எங்க போகணுமோ அங்க நேர்ல போறாங்க. நம்ம மாநிலத்துல கேரள அரசுக்கு அறிவுரை சொல்லுன்னு கெஞ்சி கடுதாசி போடுறாங்க பிரதமருக்கு. லட்சக்கணக்குல சொந்த இனம் அழிக்கப்பட்ட போதே கடுதாசி எழுதி, தந்தி அடித்து தமிழனைக் காக்கத் துடித்த இனமில்ல நாமெல்லாம்?

உலமாக்கள், பள்ளி வாசல்களில் பணிபுரியும் இமாம்கள், மோதினார்கள், தர்க்காக்களில் பணிபுரியும் முஜாவர்கள், மதரஸôவில் பணிபுரியும் அரபி ஆசிரியர்கள் என 11,457 நபர்களுக்கு ரூ. 3 கோடியே 18 லட்சத்து 4 ஆயிரத்து 632 செலவில் சைக்கிள்கள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறுபான்மையினர் என்ற சாக்கில் வாக்குக்காக இதையெல்லாம் இஷ்டத்திற்கு செய்பவர்கள், வீதிகளில் பூசாரிகளையும், அர்ச்சகர்களையும் போராட்டம் நடத்த வைத்து வேடிக்கை பார்ப்பார்கள். ஏனென்றால் இவர்களுக்கு வாக்கு வங்கியாகத் தெரிவது முஸ்லீம்களும் கிறித்துவர்களும் மட்டுமே, வெல்வது இந்து வாக்குகளில் தான். எல்லா கட்சியும் நக்குறது இங்க, வாலாட்டுறது அங்க.

புது தில்லி, நவ. 29: சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீதம் வரை நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவைத் திரும்பப் பெற முடியாது என பிரதமர் மன்மோகன் சிங் சூசகமாகத் தெரிவித்துவிட்டார்.

நாட்டை யாருக்காவது மொத்தமா வித்து தொலைங்கய்யா. சும்மா ஒவ்வொண்ணுலயா 51 விழுக்காடு, 36 விழுக்காடுன்னு பிரிச்சி விக்கறதுக்கு பதிலா ஒரேயடியா வித்து தலை முழுகிடுங்க. சனியன் விட்டதுன்னு நாங்க நிம்மதியா இருப்போம்.

 

Advertisements

28/11/2011

மலையாளிகளுக்கு ஆப்படிக்க ஒரு நல்ல வாய்ப்பு

Filed under: அரசியல்,செய்தி விமர்சனம் — கிருமி @ 8:28 பிப
Tags: , , , ,

புதுதில்லி, நவ.28: சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுந்துள்ள முட்டுக்கட்டையை போக்குவது குறித்து நாளை அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிகிறது.

கூட்டம் கூட்டி விவாதிக்கறதுங்கறதே ஒரு பித்தலாட்டம் தான். அன்னிய முதலீட்டுக்கு ஒரு விழுக்காடு கூட அனுமதி தரக்கூடாது, இதுக்கு எதுக்கு கூட்டம்?. இவனுங்க இந்தியாவை இப்டி தவணை முறைல வித்து கண்ட நாட்டுக்காரனும் வந்து சுரண்டவா சுதந்திரம் வாங்கினோம்? வெள்ளைக்காரன் காலத்துல ஒருத்தன் சுரண்டினான், இன்னிக்கு அத்தனை பேரும் சுரண்டிக்கிட்டு, யாரு வேணும்னாலும் வந்து சுரண்டுங்கடான்னு கதவைத் தொறந்து விடறாங்க. இவனுங்க பொறம்போக்கா இருக்கறது மட்டுமில்லாம, நாட்டையே பொறம்போக்காக்கிட்டாங்க.

சென்னை, நவ.28: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக மக்களை ஆத்திரமூட்ட கேரளம் சதித்திட்டம் தீட்டி வருவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் மலையாளிகளுக்கு ஆப்படிக்க நல்ல சந்தர்ப்பம். பயன்படுத்திக் கொண்டால் தமிழர்கள் புத்திசாலிகள், இல்லாவிட்டால் கையாலாகாதவர்கள் தான். நீதிமன்றம், வழக்கு என்று சந்திப்பதை விட கேரளத்திற்கு இங்கு இருந்து செல்லும் அனைத்தையும் நிறுத்தி, ஒருத்தரும் மலையாளி உணவகங்களில் சாப்பிடாமல், தேனீர் குடிக்காமல் இருந்தால் பதினைந்து நாளில் ஒரு முடிவு தெரிந்திடும்.

சென்னை, நவ.28: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தின் சதியை முறியடிக்க தமிழகக் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லட்சக்கணக்குல கொன்னு குவிச்சப்பவே ஒண்ணு சேராத நாம, இந்த அணைப் பிரச்சனைக்கு ஒண்ணு சேர்ந்திடுவோமா என்ன? ஐயமாத்தான் இருக்கு. கேரளத்துக்கு பொருட்களை தடை பண்ணச் சொன்னா, நம்ம வியாபாரிங்க என்ன பண்ணுவாங்க தெரியுமில்லே. கேரளாவுல இருந்து அது வரலை, இது வரலைன்னு சொல்லி கண்டதையும் விலையேத்தி கொள்ளையடிப்பாங்க, அதுல எல்லாரும் ஒத்துமையா இருப்பாங்க. இந்த அணை அரசியலை மலையாளிகளோட தேனீர் கடைகள்ள உக்காந்து, நாத்தம் புடிச்ச அந்த கழுவாத கண்ணாடி குவளைல நக்கி நக்கி தேனீர் குடிச்சிக்கிட்டே பேசுவோம்!

 

சென்னை :”சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்த முடிவை எடுப்பதற்கு முன், மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்கவில்லை. இது, மத்திய அரசின் ஆணவப் போக்கை வெளிப்படுத்துகிறது என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஆஹா. சாத்தான் வேதம் ஓதுதுய்யா! ஆணவத்தைப் பத்தி நீங்க பேசறீங்களாக்கும். ஆனாலும் சொன்னது சரிதான். மத்திய அரசின் சர்வாதிகாரத்தனம் தெளிவில் தெரிகிறது.

 

27/11/2011

துரோகியை விட எதிரியே மேல்.

புது தில்லி, நவ.26 : மும்பைத் தாக்குதல் நடந்து சனிக்கிழமையுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதில் ஈடுபட்டவர்கள் மீது பாகிஸ்தான் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அப்டி போடு. பல மணி நேர மும்பைத் தாக்குதல் நடந்துக்கிட்டு இருக்கும் போதே அதிரடியா பாகிஸ்தான் மேல சுட்டு, ஊடுருவி, அதிரடி தாக்குதலை தொடங்கியிருந்தா அது அழகு.  எதுக்கெடுத்தாலும் ராஜதந்திர ரீதி, அரசியல் ரீதி, துறை ரீதின்னு பேசிக்கிட்டு எந்த நடவடிக்கையுமில்லாம காலங்கடத்தற உங்களுக்கு பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கலைன்னு சொல்ல வெக்கமாயில்ல? பல்லாயிரம் மைல் தூரத்துல இருக்கற அமெரிக்காக்காரன் பின் லேடனை பாகிஸ்தானுக்குள்ள புகுந்து சாவடிக்கிறான். ஒரு கம்பி வேலிக்கு பின்னாடி இருக்கற நாட்டுல இருக்கற நாட்டுக்குள்ள பட்டவர்த்தனமா ஒளிஞ்சிருக்கற தாவூத் இப்ராகிமை இத்தனை வருஷமா நெருங்க முடியாத அரசுகள் ஆண்மையற்ற, பேடித்தனமான அரசுகளாத்தானே இருக்க முடியும்.

இந்திய அரசைவிட இலங்கை அரசே மேல்: விஜயகாந்த்

சென்னை, நவ.27: கடலோர காவல்படை நீதிமன்றத்தில் அளித்துள்ள பதிலைப் பார்க்கும்போது, இந்திய அரசைவிட இலங்கை அரசே எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

உண்மைதான். துரோகியை விட எதிரியே மேல்.

சென்னை, நவ.27: மாவீரர் தினத்துக்காக அஞ்சலி செலுத்திய விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சியினர் 15 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

இது அப்பட்டமான ஜனநாயக விரோதம். இறந்தவர் எதிரியாயினும் மரியாதை செலுத்துவது நாகரீகம். ஆனால் தன் இனத்திற்காக உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமைகள் மறுக்கப்படுவது இந்தியா மற்றும் இலங்கையில் மட்டுமே காணக்கூடிய சர்வாதிகாரத்தனமாகும்.

சென்னை, நவ. 25: அரசியல் பிரச்னைகளுக்கு ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவை தீர்வாகாது என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர். சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், பஸ் கட்டணம், பால் விலை ஆகியவற்றை தமிழக அரசு அண்மையில் உயர்த்தியது. எதிர்காலத்தில் தமிழகம் பொருளாதார நிலையில் உயர வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

அடக் கொடுமையே! அரசியல் பிரச்சினைகளுக்கு ஆர்ப்பாட்டமும் போராட்டமும் தீர்வாகாதுன்னா, வேறென்ன தீர்வாம்? விலைகளை உயர்த்தினா பொருளாதாரம் உயர்ந்திருமா? இத்தனைக்கும் சென்னைல ஒரு வாரமா வெயில் இல்ல, நல்ல மழை.

தினமணியின் தலையங்கத்தில் ஒரு பகுதி : ஒவ்வொரு காலத்திலும் தணிக்கைத் துறை மிக கவனமாக இருந்திருக்கிறது. எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த “சிவகவி’ திரைப்படத்தில் ஒரு பாடல் வரி, “முகம் அது சந்திர பிம்பமோ, மலர்ந்த சரோஜமோ’ என்றிருந்தது. இந்தப் பாடலைப் பாடும்போது, முகமது சந்திர பிம்பமோ என்று ஒலித்தது. இந்த வரி இஸ்லாமியர்களைச் சங்கடப்படுத்துமோ என்று தணிக்கைத் துறை கருதியபோது, அந்தப் பாடல் வரியை “வதனமே சந்திர பிம்பமோ’ என்று மாற்றினார்கள். இதுபோலப் பல உதாரணங்களைக் காட்ட முடியும். ஏன், “குற்றப்பத்திரிகை’, “காற்றுக்கென்ன வேலி’ போன்ற படங்கள் தணிக்கைக் குழுவில் பட்ட பாட்டை நாடே அறியும்.

நான் முன்பு படித்த ஒரு புத்தகத்தில் இருந்தபடி, அந்தப் பாடலை எழுதிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஒரு கடை நிலை ஊழியர் (தேனீர் பையனோ, அலுவலக உதவியாளரோ) ‘முகமது சந்திர பிம்பமோ, அப்போ அடுத்த வரி ஏசு சூரிய பிம்பமோவா?’ என்று கேட்டதற்கு பின் ‘முகமது’ வதனமானதாம்.

18/11/2011

மல்லாக்க படுத்து வாந்தி எடுக்கும் கருணாநிதி!

http://ethiroligal.blogspot.com/2011/11/blog-post_12.html

மல்லாக்க படுத்துக்கிட்டு எச்சி துப்புனவங்களைப் பத்தி கேள்விப்பட்டிக்கோம். ஆனா மல்லாந்து படுத்து வாந்தி எடுத்துக்கிட்ட ஒரே பெரும்புள்ளி கருணாநிதி தான்.

ஒரு விசயத்தை எழுதியவனை விமர்சிக்கும் போது பின்பற்ற வேண்டிய குறைந்த பட்ச அடிப்படை நாகரீகத்தை கூட கடைப்பிடிக்கும் சுய கட்டுப்பாடு இல்லாத ஒரு மனிதர் கருணாநிதி. இது குறித்து எத்தனையோ கேள்விகளை நாம் எழுப்பலாம். கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள், பெண்கள் உட்பட யாரை வேண்டுமானாலும் சில எழுத்துகளில் சந்திக்கு இழுத்து விட முடியும். கருணாநிதி குடும்பத்துப் பெண்கள் யார் பெயரையாவது குறிப்பிட்டு ‘அவர் பத்தினி என்றால்… இதை நிரூபிக்கட்டும்’ என்று அவர் போலவே சவால் விடுக்க எவ்வளவு நேரமாகும்?

காஞ்சிபுரம், நவ. 16: நிலப் பறிப்புப் புகார் தொடர்பாக ராமநாதபுரம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரித்தீஷ் (எ) சிவக்குமார் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

பாத்துங்க, டெரர் கிங் ரிதீஷை மறந்தும் வெளில உட்டுறாதீங்க. திரும்ப நடிக்க வந்துட்டா, மக்கள் பாடு திண்டாட்டமாயிடும்.

சென்னை, நவ.17: மத்திய அரசிடமிருந்து போதிய நிதி உதவி கிடைக்காததால் பஸ், பால், மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அடக் கொடுமையே! மத்திய அரசு கிட்ட இருந்து நிதி வரும்னு சொல்லியா வாக்கு கேட்டீங்க? அப்டின்னா, காங்கிரசுக்கே வாக்களிச்சிருப்போமே! ஏன் இந்த அரசியல்வியாதிங்க எல்லாருமே, ஆட்சிக்கு வர்ற வரைக்கும் ஒரு மாதிரியும், வந்த பின்னாடி வியாபாரிங்க மாதிரியும் நடந்துக்கிறாங்க?

இது பச்சை அயோக்கியத்தனம். கருணாநிதி ஆட்சியில பேருந்து கட்டணத்தை உயர்த்துறாரு, மின் கட்டணத்தை உயர்த்துறாருன்னு, கூவிக்கினே இருந்த இந்தம்மா, இப்போ ஏதோ ஒரு சாக்கை வச்சி அதையே திரும்ப செய்தா, அதுமாதிரி ஏமாற்று வேலை வேறு எதுவும் இருக்க முடியாது. சென்னை தவிர ஆவின் பால் எங்கு வாங்கினாலும் (அரை லிட்டர்) உறை மேல் போட்டிருப்பதற்கு மேல் ஒன்று முதல் மூன்று ரூபாய் வரை அதிகம் தந்தால் தான் கிடைக்கும். அதாவது லிட்டருக்கு ஆறு ரூபாய் இப்போதே அதிகம் விற்கப்படுகிறது. இனி மேலும் ஆறு ரூபாய் ஏற்றி, அதற்கு மேல் கடைக்காரர்களுக்கு லிட்டருக்கு ஏழெட்டு ரூபாய் கப்பம் கட்டினால் தான் வீட்டில் தேனீர் குடிக்க முடியும்.

உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பின் ஜெயலலிதாவின் போக்கின் உண்மை நிலை வெளி வந்து கொண்டிருக்கிறது. நூலக இட மாற்ற அறிவிப்பு, விலை உயர்வுகள் என்று வரிசையாக.

இன்னொரு சந்தேகம், ஈழப்போரின் போது தேர்தல் வாக்குறுதியா ஒண்ணு சொன்னீங்களே! நினைவிருக்கா? ‘ஈழத்திற்கு ராணுவத்தை அனுப்பி தனியீழம் அமைப்பேன்’னு வாய் கூசாம வாக்கு குடுத்தீங்களே? ஜெயிச்சிருந்தா, ‘மத்திய அரசு ராணுவத்தை அனுப்ப மறுப்பதால், ஈழத்தமிழர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை, அவர்களுக்கு என் அஞ்சலிகள்’னு சொல்லியிருப்பீங்களோ? கண்டிப்பா சொல்ற ஆளு தான் நீங்க, ஏன்னா நீங்க எப்பேர்ப்பட்ட கருணாநிதியவே எதிர்த்து அரசியல் பண்ற அரசியல்வியாதி ஆச்சே!

குரங்கு வந்தாலும் சரி தேவாங்கு வந்தாலும் சரி அழகு ஒரே மாதிரி தான் இருக்கிறது.

புவனேஸ்வர், நவ.17: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவரது இல்லத்தில் புல்தரையின் மீது நடக்கும்போது கால் வழுக்கி கீழே விழுந்தார். இதில் அவரது வலது காலில் உள்ள தசைநார்களில் காயம் ஏற்பட்டது.

அடப்பாவமே! இவரென்ன புல் தடுக்கி பயில்வானா?

17/11/2011

கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை

Filed under: அரசியல்,செய்தி விமர்சனம் — கிருமி @ 12:54 பிப

கள்ளக்குறிச்சி, நவ. 16: கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள அணைக்கரை கோட்டாலத்திலுள்ள மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீரை பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், புதன்கிழமை திறந்து வைத்தார்.

அட பைத்தியக்காரங்களா! அணையில இருந்து தண்ணிய ஆண்டுக்கு ஆண்டு திறந்து விடுறது நீர்ப்பாசனத் துறையோட கடமை. இதுக்கு ஏன்யா மந்திரி வரவேண்டியிருக்கு?
மந்திரி வந்து சாவி போட்டாத்தான் அணை மதகு திறக்குமா? அதுக்கு ஒரு விழா வச்சி,  மைக் செட் போட வசூல் பண்ணி, கணக்கும் காட்டுவீங்க! ஏன்யா இப்டி மக்கள் துட்டையும் நேரத்தையும் வீணாக்கறீங்க?

சென்னை, நவ. 16: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களில் இலங்கை அரசு இரட்டை நிலையைக் கையாள்வதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

இதில், கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை.
முன்னவர் கடிதங்களை எழுதி தவறாது அனுப்பிக் கொண்டிருந்தார். இவர் நடுவண் அரசைக் குற்றம் சாட்டி, கடிதமும் எழுதுகிறார் அவ்வளவுதான். நிலைமை அப்படியே தான் இருக்கிறது. தாக்கப்படுவது தமிழன் அல்ல இந்தியன் என்று மைய அரசுக்கு உணர்த்த
முயல்வது வீண் செயல். தெரிந்தே வாளாயிருக்கும் நடுவண் அரசை மீறி வாளெடுக்க வாய்ப்பிருக்கிறதா என்று நோக்குவதே தக்க செயலாயிருக்க முடியும்.

பைஸாபாத், நவ.17: யோகா குரு பாபா ராம்தேவுக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என்று உத்தரப்பிரதேசத்தின் பைஸாபாத் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லிபியா. சிரியா நாடுகளின் வரிசையில் இந்தியாவிலும் அரசுக்கு
எதிராக கிளர்ச்சி செய்ய ராம்தேவ் ஏற்பாடு செய்கிறார் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முகமது அலி என்ற சமூக சேவகரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட கூடுதல் சிவில் நீதிபதி பாகிரதி வர்மா விசாரணையை நவம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சரிய்யா! கிளர்ச்சியை எதுக்கு ஏற்படுத்த முயற்சி செய்யறாரு? ஊழலையும், ஊழல் புரியும் அரசியல்வாதிகளையும் எதிர்த்து தானே! இதுக்கு க்ரிமினல் வழக்கு போடுவீங்களா?   கேட்டா, அவருக்கு கோடிக்கணக்குல சொத்து இருக்குன்னு சொல்லுவீங்க. ஏன்யா,
கோடீசுவரன் ஊழலை எதிர்க்கக் கூடாதா? கோடீசுவரன், கிளர்ச்சி செய்யக்கூடாதா?  கோடீசுவரன் நியாயம் பேசக்கூடாதா?

சென்னை, நவ.17: ரசாயன உரங்களின் விலை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயர்த்தப்பட்டதால், விவசாயிகள் பெருந்துன்பத்துக்கு ஆளாகி உள்ளனர். உரங்கள் கிடைக்காமல், கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றது. உர விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து, மாநில அரசுகளை வலியுறுத்தி, தஞ்சாவூரில் நாளை பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், மதிமுக உண்ணாநிலை அறப்போர் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பலத்த மழை பெய்து வருவதாலும், தொடர்ந்து மழை நீடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாலும், இந்த உண்ணாநிலை அறப்போர் ஒத்தி வைக்கப்படுகின்றது.

ரசாயன உரங்களை பயன்படுத்தாம இயற்கை உரங்களுக்கு மாறுங்கன்னு எல்லாருக்கும் அறிவுரை சொல்லி பிரச்சாரம் செய்யறதை விட்டுட்டு, ரசாயன உர விலைய குறைக்கச் சொல்லி போராட்டம் நடத்தறது, கேனத்தனமா இருக்கு.
ஆமா, இதை ஏன் நீங்க அழகிரி வூட்டு வாசல்ல நடத்தக் கூடாது?
மழை பெய்ஞ்சா, உண்ணாவிரதம் இருக்க முடியாதா என்ன? மொத்தத்துல விளம்பரத்துக்கு எதையாவது செய்யறீங்கன்னு தெரியுது!

புதுதில்லி, நவ.17: இனிவரும் காலங்களில் பெட்ரோல் விலையை 2 வாரத்துக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்ய அரசு எண்ணெய் நிறுவனங்கள் முடிவுசெய்துள்ளன.

அட நாசமாப்போறவங்களா! நாடு தாங்குமாய்யா! எந்த விலையையும் கட்டுக்குள்ள வைக்க முடியாத அரசும் ஒரு அரசா! அந்த அரசன் தலையில இடி விழ!

14/11/2011

மேலமருதூர் நில மோசடிகள்

இதுவரை தமிழகத்தில் நடந்த நில அபகரிப்பு மோசடிகளிலேயே மிகப்பெரியது, மேலமருதூர் நில மோசடிதான். தூத்துக்குடி அருகிலுள்ள மேலமருதூரில் கருணாநிதி குடும்பத்தினரின் பினாமிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஐந்தாயிரம் அல்லது ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோஸடல் எனர்ஜென் மின் நிறுவனத்தின் நில மோசடிகள் பற்றிய உண்மைகள் வெளியில் வரவே இல்லை. இரண்டாயிரத்து அறுநூறு ஏக்கருக்கும் மேல்  பரப்பளவுள்ள மாபெரும் நிலப்பரப்பை பத்துப் பன்னிரண்டடிக்கு மேல் உயரமுள்ள பிரம்மாண்டமான மதில் சுவர் கட்டி வளைத்துப் போட்டிருக்கிறது இந்த நிறுவனம்.

ஒரு (கீழக்கரை) முஸ்லீம் பெயரில் நிலங்களும், முக்கிய பங்குகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அரசல் புரசலாக இந்த மோசடிகள் குறித்து செய்திகள் வந்த போதிலும், பின்னணியில் உள்ள தயாநிதி மாறன் மற்றும் கருணாநிதி குடும்பத்தினரின் பங்களிப்பு பற்றி எதுவும் செய்திகள் வந்ததாகத் தெரியவில்லை. இவர்தான் இதில் முக்கிய பங்குதாரர் எனப்படுகிறது. இந்த நிறுவன விஷயத்தில், நிலங்கள் வாங்குவது போன்ற பூர்வாங்க வேலைகளையும், ரவுடித்தன அடக்குமுறையையும் குத்தகைக்கு எடுத்திருப்பவர் முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமி.

மேலமருதூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களின் பல நூற்றுக்கணக்கான கிராம மக்களின் விவசாய விளை நிலங்கள் அப்படியே நிலத்தரகர்கள் மூலம் அடிமட்ட விலைக்கு வாங்கப்பட்டும், போலி பத்திர பதிவுகள் மூலமும் கோஸ்டல் எனர்ஜென் நிறுவனத்தின் கைக்கு போய் விட்டது. பலரது சம்மதம் இல்லாமலேயே நிலங்கள் மதில் சுவர் கட்டி வளைக்கப்பட்டு விட்டது. பலரும் நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடுத்திருக்கின்றனர். வழக்கு தொடுத்தவர்கள் மிரப்பட்டு வருகின்றனர். பலரும் உயிருக்கு பயந்து வாழுகின்றனர். சுற்றுப்புறத்தில் வசித்த மக்கள் வழக்கம் போல நிலங்களை ஏமாந்து போய் விற்று விட்டு, இப்போது அந்த நிறுவனத்திலேயே கூலி வேலை செய்து வருகின்றனர்.

நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கவிருக்கும் அந்த நிறுவனம் இயங்கத் தொடங்கும் போது அனேகமாக சுற்றுவட்டாரத்தில் எந்த விவசாய நிலமும் இருக்காது. அந்த நிறுவனம் மூலம் அந்த சுற்று வட்டாரத்தில் நிலத்தின் மதிப்பு எகிறிப்போனதால், பெரும்பாலான விவசாயிகள் பணத்துக்கு ஆசைப்பட்டு விளை நிலங்களை விற்று விட்டனர். அங்கு சுற்றி வரும் நிலத் தரகர்கள் ஒரு விவசாயியையும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. ‘நிலத்தை உடனே விற்று விடு, இல்லாவிடில் போர்ஜரி மூலம் நிலத்தை அபகரித்து விடுவார்கள் / விடுவோம்’ என்று பயமுறுத்தி, மிரட்டி நிலங்களை அபகரித்து விடுகின்றனர்.

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆட்களை வைத்து மிரட்டி பலரிடம் நிலத்தை அபகரித்துள்ளார். ஏக்கர் இரண்டு லட்சத்திற்கு பேசி விட்டு பத்திரப் பதிவின் போது கையெழுத்து போட்டுமுடிந்த பின் பணம் தருவதாகப் பேசி பத்தாயிரம் மட்டும் முன் பணம் தந்து விடுவர். பத்திரப்பதிவு முடிந்த உடன், அங்கேயே ஆட்களை வைத்து மிரட்டி, ‘உயிரோடு ஊர் போய்ச் சேர்’ என்று புத்திமதி சொல்லி (?) பத்திரமாக வழியனுப்பி வைத்து விடுவர்.

மேலமருதூருக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் கிட்டத்தட்ட ஐம்பது அல்லது நூறு ஏக்கர் நிலத்தை இப்படி மிரட்டலுக்கு பயந்து ஐ.பெரியசாமியிடம் தாரை வார்த்து ஏமாந்திருக்கிறார், பாவம். பெரும்புள்ளியான அவருக்கே இந்தக்கதி என்றால், சாதாரண சம்சாரிகள் எப்படி ஏமாந்திருப்பார்கள்!

வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் உள்ளிட்ட எவரும் இதையெல்லாம் பற்றி மூச்சு கூட விடவில்லை, காரணம்?

ஸ்டாலின் ஒரு வருடம் முன்பே தூத்துக்குடி வந்த போது இரண்டு மூன்று தடவை இந்த நிறுவனத்தினுள் விசிட் அடித்து விட்டார். வேலை வெட்டி இல்லாமல் சும்மா சுற்றிப்பார்க்கவா போயிருப்பார்?

நக்கீரன், ஜூ.வி. குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற ஏதோ ஒரு பத்திரிகையில் மூன்றாண்டுகளுக்கு முன் இது பற்றி பரபரப்பாக சிறிது எழுதினார்கள். அப்புறம் அவர்களை ‘கவனித்த’ பின், அந்த சந்தடியும் அடங்கி விட்டது.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபின் அறிவித்த நில மோசடி தனிப்பிரிவில் கட்டுக்கட்டாக புகார்கள் குவிந்துள்ளன. காவல் நிலையங்களிலேயே நிலத்தை பறிகொடுத்தவர்களுக்கும் கோஸ்டல் எனர்ஜெனுக்கும் இடையில் காவல் அதிகாரிகளே கட்டைப் பஞ்சாயத்து அல்லது புரோக்கர் வேலை செய்கின்றனர். அவர்களுக்கும் அதில் கமிஷன், நாடு உருப்பட்ட மாதிரி தான்.

அடுத்த பக்கம் »

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: