கிருமி

28/08/2012

ஊடுருவல்காரர்களும் தேசத்துரோகிகளும்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=536631
செய்தி : பாலக்காடு: “கேரளாவில், வெளிமாநில தொழிலாளர்கள் என்ற போர்வையில், வங்க தேசத்தவர்கள் அதிகளவு ஊடுருவி வருகின்றனர்; அவர்களை கட்டுப்படுத்த வேண்டும்’ என, மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியில் ஒருவர் கருத்து எழுதியுள்ளதைப் பாருங்கள்.

nizar – trivandrum,இந்தியா : ரொம்ப தேச பட்ரோட பேசுறிங்களே முதலில் இலங்கையில் இருந்து குடியேறிய தமிழர்களை வெளியேற்ற சொல்வீர்களா?

ஒரு விடயம், இலங்கை மக்கள் வேறு வழியின்றி இங்கு தஞ்சம் அடைந்தவர்கள். யாரும் இங்கு நிரந்தரமாக குடியேற எண்ணவில்லை. அந்த அகதிகளை தீவிரவாத ஊடுருவல்வாதிகளுடன் ஒப்பிடுவது போல கயமைத்தனம் ஏதாவது இருக்குமா? இலங்கை அகதிகள் நாலாந்தரக் குடிமகன்களாக முகாம்களில் நடத்தப்படுவது நாட்டுக்கே தெரியும். அவர்களை தீவிரவாதிகளுடன் ஒப்பிடுவது மாதிரி பச்சை அயோக்கியத்தனம் எதுவும் கிடையாது. பாவப்பட்ட மக்கள் நம் தொப்புள்கொடி உறவுகள், முகாம்களில் கண்களில் ஏக்கங்களுடன் அடைபட்டுள்ளனர். அவர்களை திட்டமிட்டு ஊடுருவும் அன்னிய வந்தேறிப் புறம்போக்குகளுடன் ஒப்பிட்டு உண்மைகளைத் திரிக்க நினைக்கும் கயவர்கள் நம் மத்தியில் ஊடுருவியுள்ளனர்.

திட்டமிட்டு அடையாளங்களை மறைத்து விட்டு இங்கு வந்து பொறுக்கித் தின்று கொண்டு வாலை வங்கத்துக்கு ஆட்டும் வங்கதேச ஊடுருவல்வாதிகளுக்கும், அவர்களுக்கு எடுப்பு வேலை பார்க்கும் இம்மாதிரி தேசத்துரோகிகளுக்கும் வேறுபாடு எதுவும் கிடையாது.

இன்னொன்று கேரள அரசின் உள்துறை அமைச்சர் மத்திய அரசை ஊடுருவலைக் கட்டுப்படுத்த வேண்டுகிறார்.

ஒரு விடயம் புரியவில்லை! அன்னிய தேசத்தில் இருந்து ஊடுருவல் என்று தெரிகிறது, பெரும் கலவரத்தை ஏற்படுத்தும் அளவு அபாயகரமானவர்கள் என்று அஸ்ஸாம் கலவரம் வெளிப்படையாகத் தெரிவிக்கிறது! இவ்வளவும் தெரிந்த பின், எல்லையைத் தாண்டும் போதே சுட்டுத் தள்ள வேண்டியது தானே? அதைச் செய்யத் திராணி இல்லாவிட்டால் துப்பாக்கி எதற்கு, தோட்டா எதற்கு, சீருடை அணிந்த இராணுவம் எதற்கு? பூச்செண்டு கொடுத்து வரவேற்கவா?

துப்புக் கெட்ட அரசுகள், தரங்கெட்ட மனிதர்கள் கையில் நம் வாழ்வு.

Advertisements

மதச்சார்பின்மை என்பது இந்துமத எதிர்ப்பு மட்டுமே!

Filed under: பொது,மதம் — கிருமி @ 11:08 பிப
Tags: , , ,

புது தில்லி, ஆக. 25: அசாம் மாநிலத்தில் சனிக்கிழமை மீண்டும் நடைபெற்ற வன்முறையில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் உ.பி., மாநிலத்தில் உள்ள பக்பத் மாவட்டத்தில் உள்ள ஆஸாரா கிராமத்தில் பெண்கள் ‌மொபைல் போன் பயன்படுத்தவும், ஆண் துணை இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறவும் த‌டை விதித்தது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகையில் பதினைந்து விழுக்காடு இருக்கும் சிறுபான்மையினர் என்று சொல்லிக் கொள்ளும் முஸ்லீம்களின் செயல்கள் வருங்கால பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

அஸ்ஸாம் கலவரம், அதைத்தொடர்ந்து நடந்த மும்பை கலவரம், உத்திரப்பிரதேசத்தில் சில கிராமங்களில் விதிக்கப்பட்ட தடைகள், மொபைல் போன்றவற்றுக்கான தடைகள் ஆகியவை இவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது வரும் பிரச்சினைகளுக்கான கட்டியங்கள் ஆகும். இவை ஒரு சிறு பகுதியிலிருந்து பிற பகுதிகளுக்கு பரவ சில நாட்களே போதும்.

இவர்களுக்கு இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு, மதரீதியில் சலுகைகள், உதவித்தொகைகள், கல்வி உதவித் தொகை ஆகியவற்றை மதரீதியில் அளிப்பது பெரும் பிரிவினைக்கும், கலவரங்களுக்கும் வழி வகுக்கும். முஸ்லீம்களும் கிறித்துவர்களும் பொருளாதார ரீதியில் வணிக உலகின் பெரும் சக்தியாக உருவெடுத்து வருகின்றனர். சென்னையின் முக்கிய வணிகப்பகுதிகளான பாரிமுனை, தி.நகர், புரசைவாக்கம் போன்ற இடங்களில் இவர்கள் கோலோச்ச ஆரம்பித்துள்ளனர். இவர்களின் கையில் மொத்த சந்தை (ஹோல்சேல் மார்க்கெட்) வந்து கொண்டுள்ளது. விலையையும் இவர்கள் நிர்ணயிக்கும் நாள் வந்து விட்டால், பகுதி பகுதியாக அனைத்தும் முஸ்லீம் மதமயமாகி விடும். வெகு ஆபத்தான நிலைமை இது, ஆனால் இதை நோக்கி சமுதாயம் வெகு வேகமாகச் சென்று கொண்டுள்ளது.

சற்று கவனித்துப் பார்த்தால் தெரியும். ஒரு துலுக்கன் வைத்திருக்கும் பெட்டிக் கடைக்குச் சென்று கற்பூரம், ஊதுபத்தி பாக்கெட், கம்பியூட்டர் சாம்பிராணி என இந்து சம்பிரதாயப் பொருள் போன்றவற்றை வாங்கும் போது இவர்கள் முகம் சுளிப்பதையும் வேண்டாவெறுப்பாக எடுத்துத் தருவதையும் காணலாம். இன்னும் சிலர் இவற்றை எடுத்துத் தரும்போது மட்டும் இடது கையால் தருவார்கள். என்ன அயோக்கியத்தனம் பாருங்கள்.

இவர்களைக் கட்டுப்படுத்த ஒரே வழி, இவர்களை புறக்கணிப்பது மட்டுமே. இந்துக்கள் இந்துக்களின் கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்குங்கள். இந்துக்களுடன் மட்டுமே உங்கள் அனைத்து பரிவர்த்தனைகளையும் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கட்டடங்களை, வீடுகளை வேறு மதத்தினருக்கு எக்காரணம் கொண்டும் வாடகைக்கு விடாதீர்கள். இந்துத்துவம் ஒன்றே நாம் நிம்மதியாக வாழ வழி வகுக்கும்.

மதச்சார்பின்மை என்று உண்மையில் எதுவுமே கிடையாது. அரசியல்வியாதிகள் குறிப்பிடும் மதச்சார்பின்மை என்பது நாட்டை அடிமைப்படுத்தி கிறித்துவ அல்லது முஸ்லிம் மதமாக மாற்ற எண்ணும் அன்னிய மதசக்திகளின் போலிக்கொள்கை என்பதை உணருங்கள். இவர்கள் குறிப்பிடும் மதச்சார்பின்மையின் உண்மையான நோக்கம் இந்து மத எதிர்ப்பு என்பதாகும். விழிமின்! எழுமின்!

23/08/2012

கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை?

Filed under: அரசியல்,செய்தி விமர்சனம் — கிருமி @ 9:38 பிப

தில்லி, ஆக., 23 : இந்தியாவில் உள்ள பல்வேறு தபால் நிலையங்களில் உள்ள 2.49 கோடி பயன்படுத்தாத கணக்குகளில் சுமார் ரூ.752 கோடி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இத்தனை நாளாக இதையெல்லாம் எப்படி விட்டு வைத்தார்கள். ஒரு வேளை ஸ்வாஹா செய்தது போக மீதியாக இருக்கும். ஒரு மணியார்டர் அனுப்பினாலே ஒழுங்காக போய்ச் சேர்வதில்லை என்று குற்றச்சாட்டு, இதில் இதெல்லாம் தப்பி மீந்ததாக இருக்கும்.

சிவகாசி, ஆக23: இந்தியாவிற்கு கடந்த இருவருடங்களாக சீனநாட்டின் பட்டாசு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, பல நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை அதிபர்கள் புகார் கூறியுள்ளனர்.

இரண்டு வருடங்களாகவா? அப்பட்டமான பச்சைப் புளுகு. குறைந்தது ஐந்து முதல் ஏழு வருடங்களுக்கு மேலாக இது நடக்கிறது. உண்மையில் நடந்தது என்னவென்றால் பிரபல சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் பலர் சீனப் பட்டாசுகளை இறக்குமதியாளர்களிடம் வாங்கி (அல்லது நேரடியாக பினாமிகள் மூலம் வாங்கி) உடல் நோகாமல் காசு பார்த்தார்கள். விலைவாசி உயர்வு, தொழிலாளர் பிரச்சினை என்று பல சிக்கல்களில் இருந்தவர்களுக்கு இது கொழுத்த லாபகரமாகவே இருந்தது இது. இதில் சில பெரும் உற்பத்தியாளர்களும் அடங்குவர். என்ன காரணத்தாலோ தெரியவில்லை, இம்மாதிரி ஆலை அதிபர்கள் புகார் செய்துள்ளனர். ஒருவேளை இவர்களின் கூட்டுக் களவாணித்தனத்தில் ஏதாவது பூசல் வந்திருக்கும். அல்லது வருமானம் குறைவாகப் பெற்ற ஆலை அதிபர்கள் ஒரு பிரிவாக ஒதுங்கி புகார் செய்கிறார்கள் போலும்.

இது குறித்து 2008 மார்ச் மாதம் நான் எழுதிய பதிவு ஒன்றிலேயே சீனப்பட்டாசு இறக்குமதியாவது குறித்து சொல்லியிருந்தேன்.
https://kirumi.wordpress.com/2008/03/29/38/
இரண்டு வருடங்களாக மட்டும் இறக்குமதி ஆவதாகச் சொல்லி இருப்பது, இவர்களின் கடந்த கால திருட்டுத்தனங்களை மறைப்பதற்காக மட்டுமே இருக்கும்.

அமெரிக்க பத்திரிகை போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலி்ல், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவை, பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, பட்டியலில் 6ம் இடம் பிடித்துள்ளார்.

காரித்துப்பிக் கொள்ளவேண்டிய விசயம்.

நிலக்கரி சுரங்க ஒதுக்‌கீட்டில் நிகழ்‌ந்த முறைகேட்டிற்கு முக்கிய காரணமான பிரதமர் மன்மோகன் சிங், தனது பதவி‌யை ராஜினாமா செய்யும் வரை, பார்லிமென்ட்டை நடத்தவிட மாட்டோம் என்று பாரதிய ஜனதா கட்சி தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

இது மட்டும் நடந்து விட்டால், அதை விடப் பெரிய மகிழ்ச்சி எதுவுமிராது.

ஈரோடு : மஞ்சள் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள வைகோ அழைப்பு

அனைத்து விவசாய சங்கங்களும் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகளும் கலந்து கொள்ள உள்ளார்கள். அனைத்து விவசாயிகளும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றேன் என்று வைகோ கூறியுள்ளார்.

கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை?

விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்வதை இன்றைய சூழலில் ஒரு புரட்சி என்றால் மிகையாகாது. ஆனால் இதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் ஏன் வர வேண்டும்? இதிலும் அரசியலை நுழைத்து கொள்ளையடிக்கவா? விவசாயிகள் செய்வது வேலியில் போகும் ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்ட கதையாகாமல் இருந்தால் சரி.

20/08/2012

வாழும் கலை

Filed under: பொது — கிருமி @ 3:00 பிப

அண்மையில் மறைந்த எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனின் மொழிபெயர்ப்பு சுயசரிதைகளான பட்டாம்பூச்சி மற்றும் இன்னொரு பட்டாம்பூச்சி ஆகிய இரு நூல்களையும் சென்ற வாரம் வாசித்து முடித்தேன். அதில் ஹென்றி ஷாரியரின் சாகசங்கள் வேறெந்த கதைகளிலும் சுயசரிதைகளிலும் இல்லாத அளவு அமர்க்களமாக இருக்கும். கடலில் ஓட்டை உடைசல்களை வைத்துச் செய்த இற்றுப்போன படகுகள் மூலம் ஆயிரத்து ஐநூறு கல் தூரம் பெரும் கொந்தளிப்பான கடலில் பயணித்து நாடு நாடாக பெரும் ஆபத்துகளின் ஊடே அலையும் சாகசங்கள் நம்ப முடியாத அளவில் இருக்கும்.

இந்த நூல் நான் முதலில் வாசித்த போது சுமார் தொள்ளாயிரத்து ஐம்பது பக்கங்களுக்கு மேல் இருந்தது. தற்போதைய பதிப்பில், சுமார் எண்ணூற்று எழுபது அல்லது எண்பது பக்கங்களுக்குள் தான் இருந்தது. பக்க அளவு, எழுத்துரு அளவு எல்லாம் வித்தியாசப்பட்டதால் இந்த வேறுபாடு போலும்.

பிரெஞ்சு கயானாவின் தீவாந்திர சிறையில் அடைக்கப்பட்ட ஒரு கைதி சிலரைக் கூட்டுச் சேர்ந்து கொண்டு பலமுறை தப்ப முயன்று பிடிபட்டு பல ஆபத்துகளுக்கிடையில் தப்ப முயன்று இறுதியில் வெனிசுலாவில் அடைக்கலம் புகுந்து தப்புவதே இந்த நூலின் சாரமாகும்.

நாயகன் ஹென்றி ஷாரியர் விவரிக்கும் சம்பவங்களின் நம்பகத்தன்மை குறித்து பல விவாதங்கள் நடந்துள்ளன. பெருவாரியான நிகழ்வுகள் பிற கைதிகளின் அனுவங்கள் என்றும் பத்து விழுக்காடு மட்டுமே ஷாரியரின் சொந்த அனுபவங்கள் என்றும் விமர்சனங்கள் உண்டு.

இதைப்படிக்கும் போது ஒன்றை சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஹென்றி ஷாரியரின் இடத்தில் நம்மைப் பொருத்திப் பார்த்தால்? அப்படி நினைக்கக் கூட இயலாது நம் போன்றவர்களால். இன்றைய நமது பாரதச் சூழலில் வாழும் நம்மால் அப்படி நினைப்பதே கூட மாபெரும் பாதகமாக மனதிற்குப் படும். நாம் தவறுக்காக தண்டிக்கப்பட்டாலும் கூட விதியை எண்ணி நோகவே மனம் துணியும், தப்பத் துணியாது. அப்படி நாம் வாழ்ந்து பழகி வருகிறோம்.

இந்த லட்சணத்தில் பெருங்கடலில் சகல வசதிகளுடன் ஒரு படகைக் கொடுத்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் ஒரு தீவுக்கு போகச் சொன்னால் என்னாகும்? கேட்ட மாத்திரத்திலேயே செத்து விடுவார்கள் பலர். பெரும்பாலானவர்கள் சொல்வது எனக்கு நீச்சல் தெரியாது என்பதாக இருக்கும். பலருக்கு இரண்டு கயிறுகளை முடிச்சுப் போட்டு உறுதியாக சேர்க்கக் கூட தெரியாது. ஒரு பொருளை பாதுகாப்பாக பேக் செய்யத் தெரியாதவர்கள் பலர். வீட்டில் பியூஸ் போய் அதைப் போடக் கூட அஞ்சி மின்வேலைக்காரரை எதிர்பார்த்திருப்பவர்கள் பலர். சிறு வேலைகளுக்கும் கூட, ஒரே ஒரு நட்டை இறுக்குவதற்குக் கூட அதற்கு ஒரு ஆளைத் தேடுபவர்கள் ஏராளம். எவ்வளவோ நேரம் இருந்தும் சிறு செயல்களைக் கூட முயற்சிக்காமல், ‘நூறு ரூபாய் கொடுத்தால் இதைச் செய்ய ஆளிருக்கிறது, நம் கையில் ஏன் கிரீஸ் கறையுடன் போராட வேண்டும்’ என்ற மனப்பாங்குடன் பெரும்பாலானவர்கள் உள்ளனர்.

மரம் ஏறுவது, நீச்சல், கயிறு கட்டி ஏறுவது, முடிச்சுப் போடுதல், மின்சாரம் பற்றிய நடைமுறைக் கல்வி போன்ற அத்தியாவசியமான விடயங்களில் பலருக்கு அறிவு கிடையாது. சொல்லப் போனால் தீயணைக்கும் வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளில் குறைந்த பட்சமாவது கல்வி பயிலும் மாணவர்களுக்கும் தரப்படுவது சிறந்தது. அதுதான் வாழ்க்கைக் கல்வி என்றாகும்.

நம்மைச் சொல்லிக் குற்றமில்லை. நம் கல்வி முறையும் வாழ்க்கை முறையும் அப்படி அமைந்து விட்டிருக்கின்றன.

19/08/2012

தனியார் தவறுகளுக்கு மக்கள் பணத்தைச் செலவிடும் அரசு.

Filed under: செய்தி விமர்சனம்,பொது — கிருமி @ 11:38 முப

ஓட்டப்பிடாரம், ஆக. 14: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே தனியார் அனல் மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகமுதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சில கேள்விகள்.

விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் பண உதவி வழங்குவதை மனிதாபிமானமுள்ள எவரும் தவறென்று சொல்ல இயலாது.

ஆனால், ஒரு தனியார் நிறுவனத்தில் ஏற்படும் விபத்துக்கு அந்த தனியார் நிறுவனம் தானே பொறுப்பேற்க வேண்டும், அது தானே நடைமுறை, சட்டம்? விபத்துக்கு எந்திரக்கோளாறு காரணமா, மனிதத்தவறு காரணமா, சதி காரணமா, கவனக்குறைவு காரணமா என்றெல்லாம் ஆய்ந்து பார்க்கவேண்டாமா? அது அந்த தனியார் நிறுவனத்தின் தவறு என்றால் அரசினால் வழங்கப்பட்ட அந்த தொகை தனியார் நிறுவனத்திடம் அல்லவா வசூலிக்கப்பட வேண்டும்? அதாவது அரசு வழங்கும் உடனடி நிவாரணத்தொகையை அந்த நிறுவனம் பின்பு அரசுக்கு திரும்ப செலுத்துமாறு விதிமுறை ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டுமே?

இது போன்ற விபத்துகளில் செய்தி வரும்போதே உதவித்தொகை வழங்கப்பட்டது என்ற செய்தியும் வருவது ஏன்?
மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற அரசுத்தலைமையின் ஆர்வம் மட்டுமே இதற்கு காரணமாக இருக்க முடியும். ஆனால் மக்களிடம் நல்ல பெயர் எடுக்க மக்கள் பணத்தை தனியாரின் தவறுகளை ஈடு செய்ய அரசு தயங்குவதே இல்லை. மக்களிடன் நற்பெயர் ஈட்ட தனியாரின் தவறுகளை பூசி மெழுக அரசு தயங்குவதில்லை.

இந்த நிலையில், வேலை வாங்கும் எந்த நிர்வாகமும் “அரசு ஒரு லட்சம் தந்து விட்டது, நானும் ஒரு லட்சம் தருகிறேன், வாயை மூடிக்கொண்டு போ” என்று சொல்லும். சாதாரணமாக இம்மாதிரி தொழிலாளிகள் மாதமொன்றுக்கு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை ஈட்டுகிறார்கள். இந்த ஓரிரு லட்சம் என்பது அவர்களின் இரண்டு அல்லது மூன்று வருட சம்பாத்தியம், அவ்வளவு தான். இந்தப்பணம் அவர்களின் ஈமச்செலவு, கடன் தீர்க்க என்று செலவாகி ஓரிரு மாதங்களில் குடும்பம் வறுமையில் வாடும். அவர்களை நம்பி இருக்கும் குடும்பத்தின் கதி?

இம்மாதிரி விபத்துகளுக்கு பின் என்றாவது விபத்துக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது என்றோ, அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது என்றோ செய்தி வந்திருக்கிறதா? வராது. தனியாரின் தவறுகளுக்கு பொறுப்பேற்பது போல் நட்ட ஈடு வழங்கும் அரசுகளிடம் அப்படிப்பட்ட நடவடிக்கைகளை எதிர்பார்க்கத்தான் இயலுமா?

17/08/2012

கருணாநிதியும் இணைய உலகமும்

Filed under: அரசியல்,செய்தி விமர்சனம் — கிருமி @ 11:56 பிப

குவிட்டோ, ஆக. 16: விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவைக் கைது செய்வதற்காக லண்டனில் உள்ள தங்கள் நாட்டுத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப் போவதாக பிரிட்டன் மிரட்டியதாக ஈக்வடார் குற்றம் சாட்டியுள்ளது.

என் அறிவுக்கு எட்டியவரை இது ஒரு நாடகம். அவர் பிரிட்டன் அரசிடம் மாட்டினால், சுவீடன் வழியாக அமெரிக்கா கொண்டு செல்லப்படுவார். ஈக்வடார் சென்றாலும் அங்கிருந்தும் அமெரிக்கா கொண்டு செல்லப்படுவார். இல்லாவிடில் நேரடியாக அமெரிக்கா அவர் இருக்கும் இடத்தில் விசாரிக்கும்.

வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் என்று குறுந்தகவல் மூலம் வதந்தி பரவியதால் மொத்தமாக குறுந்தகவல் அனுப்பும் வசதி 15 நாட்களுக்கு நிறுத்தப்பட்டது.

மொத்தமாக குறுந்தகவல் அனுப்பும் முறை எரிச்சலூட்டும் ஒரு செயல். நம் வீட்டு வாசலில் வீசப்படும் விளம்பர பிரசுரங்கள் போல நம்மைக் கேட்காமலே நம் செல்பேசியில் விளம்பரங்கள் வந்து குவியும். இதை நிரந்தரமாக நிறுத்தித் தொலைத்தால் நல்லது. 100 இலவசம் 1000 இலவசம் என்ற சலுகைகள் அறிவிக்கக் கூடாது என்று கட்டுப்பாடு கொண்டு வந்தாலும் நலம்.

சென்னை: டி.என்.பி.எஸ்.சி சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தர்மபுரியைச் சேர்ந்த சின்னச்சாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்துள்ளது. சின்னசாமி தாக்கல் செய்த மனுவில், தனது வினாத் தாளில் 200க்கு 195 கேள்விகள் மட்டுமே இருந்ததாகவும், இதனால் தனது அரசு வேலை உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு டி.என்.பி.எஸ்.சிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது வரை நடந்த அனைத்து தேர்வுகளிலும் பல குளறுபடிகள், முறைகேடுகள் நடந்துள்ளன. இவர் ஏதோ கொஞ்சம் விவரம் தெரிந்தவர், வசதி உள்ளவர் போலிருக்கிறது. நீதிமன்றம் வரை சென்று விட்டார். எத்தனை பேர் என்ன செய்வது என்று தெரியாமல் மனம் குமுறிக் கொண்டிரருந்தார்களோ பாவம்! இறுதியாக நடந்த 4 தேர்வுகளையும் ரத்து செய்து விட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும். நேர்காணல் முறையையும் ஒழித்து விட்டு தேவைப்பட்டால் இன்னொரு அரைமணி நேரத் தேர்வு வைத்து உயர் பணிகளுக்கு தேர்வு செய்யலாம். நேர்காணல் என்பது ஊழலுக்கான திறந்தவெளி அழைப்பிதழ்.

கருணாநிதி இணையதளம் துவங்கினார்.

போய்ப் பார்த்தேன். “உள்ளத்தோடு ஒன்றிக்கலவாத எந்தப் பணியும் நிரவப்படாத பள்ளமாகத்தான் கிடக்கும்”னு போட்டிருக்குது.
“ஆமா அந்த விரவப்படாத பள்ளம் அந்த கிரானைட் குவாரி அளவுக்கு இருக்குமா?”
இந்த பொன்மொழி(?) உதிர்த்தவர் டாக்டர் கலைஞராம். மேற்படி தளம் இன்னும் ஆயத்தமே ஆகவில்லை, இது ஒரு பக்கம் மட்டும்தான் உள்ளது. இதற்குத்தான் இந்த ஆர்ப்பாட்டமா? கருமம். எனக்குத் தெரிந்து நம் நாட்டில் தான் அரசியல்வாதிகளைப் பெயரிட்டு அழைக்காமல் ஒரு அடைமொழியைக் கொடுத்து அதற்கும் முன் டாக்டர் போன்ற இற்றுப் போன பீற்றல்களைப் போட்டு விளிப்பது நடக்கிறது. (டாக்டர் புரட்சித்தலைவி, டாக்டர் கலைஞர்). தட்சிணாமூர்த்தியை கருணாநிதி என்று தமிழ்ப்படுத்தும்போது கருணாநிதி என்பது தமிழல்ல என்று கூடத் தெரியாத ஒருவரை தமிழகத்தில் ஒரு கூட்டம் மூதறிஞர், முத்தமிழ் வித்தகர், தமிழினக் காவலர் என்றெல்லாம் கூறிப் பிதற்றுகிறது. எல்லாம் காலத்தின் கோலம்!

அடுத்த பக்கம் »

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: