கிருமி

15/08/2012

முகநூலும் கருணாநிதியும்

Filed under: அரசியல்,செய்தி விமர்சனம் — கிருமி @ 2:28 பிப

சென்னை, ஆக., 15: சுதந்திர தினமான இன்று முதல் இளைய தலைமுறையினர் அதிக அளவில் ஆர்வமுடன் பயன்படுத்தும் சமூக வலைதளங்களான ‘Twitter’ – ‘facebook’ ஆகியவற்றில் கருணாநிதி பெயரில் கணக்கும் புதிய வலைப்பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளன.

உருப்பட்டா மாதிரி தான்! இனி இங்கயும் அழும்பு பண்ணுவாரே? ஒரு வேளை டிவிட்டர், பேஸ்புக், கூகுள் எல்லாத்தையும் விலை பேசி வாங்கிட்டாங்களோன்னு எனக்கு ஐயமாத்தான் இருக்கு. வாய்ப்பு இருக்கு. இவங்க கால் பதிச்சு குழப்பாத குட்டையா? இன்டர்னெட்டை முடக்கு இறைவா, நாங்கள் பழையபடி புறா, தந்தி, தபால் முறைகளைப் பின்பற்றிக் கொள்கிறோம்.

சென்னை, ஆக.15: டெசோவின் அடுத்த மாநாட்டை தென் அமெரிக்காவில் நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சே. என்ன ஒரு கீழ்த்தரமான அரசியல்! கடைத்தர அரசியல்வாதிகள் இப்படி ஒரு இனத்தையே சீரழித்து விட்டார்களே!

பெரம்பலூர், ஆக. 15: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 1,350 ச.மீ. பரப்பளவில் உப்பால் தேசியக்கொடி வடிவமைத்து, செவ்வாய்க்கிழமை உலக சாதனை படைத்தனர்.

இதில் என்ன உலக சாதனை, பெருமைப்பட என்ன இருக்கிறது என்று புரியவில்லை. பணம் இருப்பவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ள உலகில் இதெல்லாம் சாதனையா என்று ஏமாற்றமாக இருக்கிறது. கோடிக்கணக்கில் பணம் இருப்பவருக்கு பத்து பள்ளிகளும் நான்கைந்து கல்லூரிகளும் இருக்கத்தான் செய்யும். கூப்பிட்ட குரலுக்கு மாணவர்கள் வந்து என்ன சொன்னாலும் செய்கிறார்கள் என்பதற்காக ஒரு தூறலில் கரைந்து விடக் கூடிய ஒரு சித்திரத்தை உருவாக்குவது பெருமையா?

இன்னும் பொருளற்ற கூத்துகள் உலகம் முழுவது நடந்து கொண்டு தான் இருக்கின்றன, சாதனைகள் என்ற பெயரில். ஆயிரக்கணக்கில் ஒரே நேரத்தில் வாய் கொப்புளித்தல், சவரம் செய்தல் என்று கிறுக்குத்தனங்கள் பலவிதம், அதில் இது ஒரு விதம்.

Advertisements

12/08/2012

டி.என்.பி.எஸ்.சி குளறுபடிகள்

செய்தி : தினமணி : ஈரோடு, ஆக.12: இன்று டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டத்தில் தேர்வுகள் எழுதியவர்கள் தேர்வு எழுதி முடித்தபிறகு பஸ்களில் திரும்பிக் கொண்டிருதார்கள். அப்போது, ஒரு பெண் வைத்திருந்த கேள்வித் தாள் ஜெராக்ஸ் பிரதி, காலை எழுதிய டி.என்.பி.எஸ்.சி வினாத்தாளின் பிரதியாக இருந்ததை அருகில் அமர்ந்திருந்த ஒருவர் தற்செயலாகக் கண்டுபிடித்துள்ளார். இதை அடுத்து, இந்தக் கேள்வித் தாள் எப்படி வந்தது? என்று விசாரித்தனர். இதை அடுத்து வினாத்தாள் முன்பே வெளியாகிவிட்டதோ என்ற பரபரப்பு ஈரோட்டில் எழுந்துள்ளது. இது குறித்து தேர்வு எழுதிய சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதை ஆணையர் நடராஜ், ஐபிஎஸ் மறுத்துள்ளார். வினாத்தாள் வெளியாக வாய்ப்பில்லை என்கிறார்.

வினாத்தாள் வெளியாகாமலா புகார் ஈரோடு ஆட்சியர் அலுவலகம் வரை சென்றுள்ளது. ஆதாரமில்லாமலா கோட்டாட்சித் தலைவர் விசாரணை நடத்தி வருகிறார்?
————

எவ்வளவோ ஊழல்கள் நடக்கின்றன, அதில் இதுவும் ஒன்று என்று நினைக்க வேண்டியது தானா?

கண்களில் கனவுகளுடன் அரசு வேலையை எதிர்பார்த்து முன்பு படித்த பாடங்களை திரும்பவும் மனனம் செய்து வரும் இளைஞர்களின் கதி அவ்வளவு தானா?

(TNPSC) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சில ஐயங்கள், வினாக்கள், கேள்விகள்………

Annual Planner என்று ஒன்று வெளியிட்டார்கள். அதாவது முதலிலேயே எந்த மாதத்தில் எந்த பணிகளுக்கு ஆளெடுப்பு அறிவிப்பு வெளியாகும் என்பதில் தொடங்கி, என்று தேர்வு நடைபெறும் எப்போது முடிவு வெளியாகும், எப்போது நேர்காணல், எப்போது பணி கிட்டும் என்பது வரை ஒரு கால அட்டவணையாக வெளியிட்டார்கள். ஆனால் அந்த அட்டவணைப்படி எதுவும் நடப்பததில்லை.

உதாரணமாக குரூப் 1 பணிக்கான அறிவிப்பு ஜூன் மாதமே வெளியாகி, தேர்வு 9-9-12 இல் நடைபெற வேண்டும். ஆனால் ஆகஸ்ட் மாதம் ஆகி விட்டது, ஆனால் அறிவிப்பே இன்னும் வெளியாகவில்லை.

CSSE-II (Station Officer; Jr. Co-op Inspector; Store Keeper) பணிகளுக்கான தேர்வு 28-07-12 என்று அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தது, ஆனால் தேர்வு நடந்தது 4-8-12 இல்.
சரி இவை தாமதங்கள் என்று ஒதுக்கி விட்டுப் பார்த்தால் வினாத்தாள் தொகுப்பு கசிவு என்று இப்போது பூதம் கிளம்புகிறது.

ஏற்கனவே வி.ஏ.ஓ தேர்வில் வெற்றி பெற ஐந்து முதல் பத்து லட்சம் வரை பேரம் பேசப்படுகிறது என்று ஒரு செய்தி சில மாதங்களுக்கு முன்பே அரசல் புரசலாக வந்தது.

இன்னொரு விசயம். தேர்வு மதிப்பெண்களை வெளியிடுவதிலும் தாமதம். முதலில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வெண்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன. பல தேர்வுகளுக்கான இறுதி மதிப்பெண்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

http://www.tnpsc.gov.in/results.html

ஆனால் பணியாளர் தேர்வு வெளிப்படையாக நடக்கிறது, ஒளிவு மறைவு இல்லை என்று TNPSC கூறிக் கொள்கிறது.

இறுதி முடிவில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் வெளிப்படையாக இணையத்தில் அறிவிக்கப்பட்டாலன்றி ஒளிவு மறைவு இல்லை என்று கூறவே இயலாது. (என்ன வெளியிட்டால் என்ன? விடைத்தாள்களையோ விடைகளையோ விற்று விட்டு பின் என்ன நடந்தால் என்ன?)

தேர்வு நடந்த ஓரிரு தினங்களில் கேள்விகளுக்கான விடைகள் குறியிடப்பட்டு இணையத்தில் வெளியாகின்றன. ஆனால் ஒவ்வொரு கேள்வித்தாளிலும் இரண்டு முதல் நான்கைந்து கேள்விகளுக்கான விடைகள் தவறாக குறியிடப்பட்டு வெளியாகின்றன. (இவற்றுக்கு ஆட்சேபம் தெரிவிப்பதாயின் 7 நாட்களுக்குள் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டுமாம்.)

ஒவ்வொரு தேர்விலும் சுமார் ஆறு லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். குரூப் 4 தேர்வை சுமார் 12 லட்சம் பேர் எழுதினர். கட்டணவிலக்கு பெற்றவர்கள் தவிர பாதிப்பேர் கட்டணம் செலுத்தினால் கூட தேர்வுக் கட்டணமே பல கோடிகள் தேறும். தேர்வுக் கட்டணத்தை வைத்தே தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் கொடுத்தது விடலாம் என்று எண்ணி விட்டார்கள் போலிருக்கிறது. அரசுக்கு சிறந்த வருமானம் தரும் தொழில், வேலைக்கு ஆள் எடுக்கும் தொழில்

ஈழமும் பித்தலாட்டக் கலைஞரும்!

Filed under: அரசியல்,செய்தி விமர்சனம் — கிருமி @ 4:03 பிப

ஈழம் என்ற வார்த்தைக்குத் தடை

கருணாநிதி ஒரு பித்தலாட்டக் கலைஞர் என்பது உலகறிந்த விடயம். டெசோ மாநாடு என்று கூத்தடி்க்க இருந்தது, அதற்கு தடை என்ற நாடகம் போன்றவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இங்கு நாம் பார்க்க வேண்டியிருப்பது தமிழர்களின் ஒற்றுமையை. தமிழகத் தலைவர்களிடம் ஒற்றுமை இல்லாததன் விளைவாக ஈழத்தில் லட்சக்கணக்கானோர் பலியாக நேர்ந்தது. இப்பொழுது ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தவே தடை என்று வந்து, அது நடைமுறைக்கும் வந்து விட்டது. எதிரணியிலிருந்து இதை எதிர்த்து அறிக்கை விட்டவர் வை.கோ. ஒருவர் தான். வேறு யாரும் வாயே திறக்கவில்லை.

எங்கே போனார்கள் விசயகாந்த், ராமதாசு, சரத்குமார், பொதுவுடைமைத் தலைவர்கள் போன்றவர்கள்? கருணாநிதி செய்யும் பித்தலாட்டங்களுக்கு வக்காலத்து வாங்கச் சொல்லவில்லை. ஆனால் இது போன்ற தடைகள் என்ன விளைவுகளை பிற்காலத்தில் ஏற்படுத்தும் என்று கூடப் புரியாத முட்டாள்களா நம் அரசியல் தலைவர்கள் என்று வியப்பாக இருக்கிறது. இது போன்ற தடைகள் மொத்தமாக தமிழனின் கருத்துரிமையையும், பேச்சுரிமையையும் ஒழிப்பதற்கான ஆயத்தங்கள் என்பது கூட தமிழக அரசியல் மேதாவிகளுக்கு புரியவில்லையா என்ன?

——–

கலவரங்கள், தீவிரவாதத் தாக்குதல்கள் போன்றவை நடக்கும் போது ஊடகங்களில் முஸ்லீம்களையும் கிறித்துவர்களையும் குறிப்பிடும் போது அவர்களின் மதத்தைக் குறிப்பிடுவதில்லை, பொத்தாம் பொதுவாக சிறுபான்மையினர் என்று பூசி மெழுகுவார்கள்! ஏன்? இப்படிச் சொல்லிச் சொல்லியே அவர்கள் பெரும்பான்மையினர் ஆகி வருகின்றனர். அவர்களை அவர்களின் மதத்தின் பெயரால் குறிப்பிடுவது மதச்சார்பின்மைக் கோமாளித்தனத்திற்கு விரோதம் என்று கருதுகிறார்கள் போலும். அஸ்ஸாம் கலவர செய்திகளில் போடோ பழங்குடியினர் என்று வெளிப்படையாக ஒரு பிரிவைக் குறிப்பிட்டு விட்டு மறு பிரிவை சிறுபான்மையினர் என்ற போர்வையில் ஊடகங்கள் மறைப்பதன் மர்மம் என்ன?

தமிழ் தின அச்சு ஊடகங்களில் வரும் செய்திகளை வைத்து யார் தாக்கப்பட்டார்கள் என்பதை அறிய முடிவதில்லை. இது மக்களை ஏமாற்றும் ஒரு போக்காகும். இதுதான் மதச்சார்பின்மையா? இதற்குப் பெயர்தான் மதச்சார்பு என்பது. சிறுபான்மையினருக்கு ஜல்லியடித்து அவர்கள் சார்பாக ஒன்றை மறைத்து வெளியிடுவது போல் நயவஞ்சகத்தனம் வேறெதுவும் இருக்கவியலாது.

15/03/2012

தினமலரின் வக்கிர புத்தி

Filed under: செய்தி விமர்சனம் — கிருமி @ 5:27 பிப
Tags: ,

ஈனத்தனமாக செய்திகளும் தலைப்புகளும் வெளியிட்டு வரும் தினமலரின் இன்னொரு கீழ்த்தரமான செயல்.

சானல்-4இன் ‘தண்டிக்கப்படாத குற்றங்கள்’ பற்றிய செய்தியின் தலைப்பு : “சானல்-4 அல்ல சானல் போர்ர்- பிரபாகரன் கொல்லப்பட்ட விதம் வீடியோவில் இல்லை”. அதாவது காட்சிகள் போர் அடிக்கிறதாம்.

என்னவொரு வக்கிரம், நம் இன மக்கள் கூப்பிடு தூரத்தில் கொத்துக் கொத்தாக கொடுமைப்படுத்தப்பட்டு சாகடிக்கப்பட்டுக் கிடக்கும் இக்காட்சிகளையெல்லாம் நம் வாழ் நாளில் காண வேண்டியிருக்கிறதே என்று மனிதாபிமானமுள்ள எவரும் வருந்தும் செய்தி பற்றிய தினமலரின் விமர்சனம் இது தான். காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையாம், என்ன ஒரு ஆணவம் பாருங்கள். இதென்ன கூத்தாடி சினிமாவா, எதையோ எதிர்பார்த்து கண்டு களித்திருக்க?

தினமலர் பத்திரிகை என்ற தகுதியை இழந்து வெகு நாட்களாகி விட்டது. கருணாநிதி ஆட்சியில் இருந்தவரைக்கும் கலைஞர் அறிவிப்பு, கலைஞர் துவக்கினார் என்று ஜால்ரா இட்டுக் கொண்டிருந்த ஒரு கால் நக்கி பத்திரிகை, இன்று கருணாநிதியை கருணா என்கிறது. கேப்டன் டர்ர்ர், கருணாநிதி கிர்ர்ர் என்று தலைப்புகள், எழுத்துப் பிழைகள், பாதி வாக்கிய அமைப்புகளில் பிழைகள் என்று கேவலமாக சரோஜாதேவி பாணியில் வெளி வந்து கொண்டுள்ளது. ஊடக விபச்சாரம் செய்து வரும் தினமலரிடம் இதற்கு மேலும் என்ன எதிர் பார்க்க இயலும். இதையும் மக்கள் வாங்கிப் படிக்கிறார்களே, நம் மக்களை என்ன சொல்ல?

வாசகர் தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தவுடன் அந்த செய்தியை நீக்கி விட்டு வேறு செய்தியைப் புகுத்தி தன் புத்தியைக் காட்டியுள்ளது தினமலர்.

பாலசந்திரன் பிரபாகரன்

16/12/2011

முத்தூத் மணப்புரம் விளம்பரங்களை சன், கலைஞர் குழுமங்கள் புறக்கணிக்குமா?

புது தில்லி, டிச.1: சமூகத்தில் எய்ட்ஸ் நோயாளிகள் ஒதுக்கப்படுவதைத் தடுக்க சட்டம் இயற்றப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

தூ.  எய்ட்ஸ் நோயாளிகள் உருவாவதை தடுக்க வழி காணாமல், ஒதுக்கப்படுபவர்களுக்கு பரிந்து பேசுகிறார்கள். வருமுன் காப்பதே புத்திசாலித்தனம் என்பது எதற்கும் பொருந்தும். அதை எதிலும் கடைப்பிடிக்காமல் இருப்பவர்கள் நாம் மட்டுமே.

சென்னை,டிச.16: ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில், அண்ணா ஹசாரே சென்னைக்கு வருகிறார்.

கிழிஞ்சது. இனி ஊரெல்லாம் வரவேற்பு தட்டி வச்சி கூத்தடிப்பாங்க. திருந்தவே மாட்டாய்ங்க, இவிங்க.

போடி, டிச. 16: கேரளத்தில் தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி
விரட்டியடிக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தி போடி, தேவாரம் பகுதியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றது.

இன்று காலை தேனியில் உள்ள கேரள மாநிலத்தவருக்குச் சொந்தமான தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ள தங்களின் நகைகளை மீட்கப் போவதாகக் கூறி, அடகுவைத்தவர்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.

போராட்டங்களை விட மலையாளிகளின் நிறுவனங்களை புறக்கணித்தால் பயனிருக்கும். செய்வார்களா நம்மவர்கள்?.

  • மொத்தமாக நகைகளை எப்பாடு பட்டும் திருப்பட்டும், முத்தூத் மணப்புரங்களிலிருந்து.
  • முத்தூத், மணப்புரம் விளம்பரங்களை சன், கலைஞர், ஜெயா தொலைகாட்சிக் குழுமங்கள் புறக்கணிக்குமா?
  • மலையாளிகளுக்கு இடம் கொடுத்தவர்கள், அவர்களை காலி செய்யச் சொல்லலாம்.
  • மலையாள திரைப்படங்களை ஓட்டாது புறக்கணிக்கலாம்.
  • மலையாள நடிகர்களையும் பாடகர்களையும் இன்ன பிற மலையாளிகளையும், தமிழ்த் திரையுலகம் புறக்கணிக்கட்டும்.

நம்மவர்களை அடித்து விரட்டும் போது அப்படி அடித்து விரட்டினாலும் தவறில்லை, இருந்தாலும் அவர்களுக்கும் நமக்கும் வேறுபாடில்லாமல் இருக்க வேண்டாம் என்று நினைத்தால் இவ்வாறான புறக்கணிப்புகள் பலன் தரக்கூடும்.

இப்படிப்பட்ட புறக்கணிப்புகளுக்கு அறைகூவல் விடுக்க எந்த கட்சியாவது, அமைப்பாவது ஆயத்தமாகி இருக்கிறதா? இல்லை. ஏனென்றால், இவர்களுக்கு பிரச்சினையை தீர்ப்பதில் ஆர்வம் இருக்காது, பிரச்சினையால் விளம்பரமும், பெயரும், ஆதாயமும் தேடுவதில் தான் இவர்களுக்கு கவனம் செல்லும்.

புதுதில்லி, டிச.16: பாரத ரத்னா வழங்குவதற்கான நெறிமுறைச் சட்டத்தில் முக்கியத் திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதை அடுத்து சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைப்பதற்கு வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

சச்சின் ஒரு விளையாட்டுக்காரர். பெரும் பண முதலைகள் பணம் குவிக்க உதவும் ஒரு வெட்டி விளையாட்டின் பிரதான ஆட்டக்காரர்களில் ஒருவர். இதனால் நாட்டுக்கு என்ன
பயன் கிடைத்தது? சச்சின் சம்பாதித்தது ஒரு புறம், வருமான வரி ஏய்ப்பு முயற்சி,  இறக்குமதி வாகனத்துக்கு வரி ஏய்ப்பு முயற்சி என்று குற்றச்சாட்டுகள்.

உலகின் இரண்டாவது பெரும் மக்கட்தொகை கொண்ட நாட்டிற்கு ஒலிம்பிக் பந்தயங்களில் என்ன, எத்தனை பதக்கங்கள் கிடைத்தன, நாட்டின் மானம் அங்கு கப்பலேறியது. இங்கு சச்சினுக்கு தேசத்தின் உயரிய விருது கிடைக்க சட்டத்தையும் வளைப்பார்கள், ஏனென்றால் நம் நாட்டுக்கே பணப்பேய் பிடித்திருக்கிறது.

01/12/2011

பற்றி எரிகிறதா தமிழகம்?

சென்னை : முல்லைப் பெரியாறு பிரச்னையில், தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும், என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஒரு மண்ணும் புரியலை. இப்போ தமிழகத்துல என்ன கலவரமா நடக்குது, இது சம்பந்தமா? சும்மா நாலைஞ்சு பேரு அறிக்கை விட்டுக்கிட்டு பம்மாத்து பண்ணிக்கிட்டு இருக்காங்க, அம்புட்டு தான். ஏதோ தமிழகமே பத்தி எரியறா மாதிரி இவர் பேசிக்கிட்டிருக்காரு.

புதுதில்லி, டிச.1: இந்திய முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய நபரான யாசின் பக்தல் என்கிற இம்ரான் பற்றி தகவல் தருவோருக்கு ரூ. 15 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று தில்லி போலீசார் அறிவித்துள்ளனர்.

ரெண்டு நாள் முன்னாடி 6 முஸ்லீம் தீவிரவாதிகளை கைத் பண்ணினாங்க. எவ்வளவு நடந்தாலும், இஸ்லாம் தீவிரவாதத்தை ஒரு போதும் ஆதரிப்பதில்லைன்னு குரல் கொடுத்துக்கிட்டே இருக்காங்க, ரொம்ப நல்லவய்ங்க. கேட்டா இவனுங்க பண்ணின எழவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். கணக்குல எழுதுறதுக்கு, அண்டப்புளுகு கதை ஒண்ணை பத்து பக்கத்துக்கு எழுதி வலையில சுத்த விடுவாங்க.

சென்னை, டிச.1: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது; அணையின் நீர்த்தேக்க அளவை 142 அடியாக உயர்த்த ஆவன செய்க என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அவங்க என்ன நினைப்புல இருக்காங்க, என்ன ஏதுன்னு நல்லா தெரிஞ்சிருந்தும் இந்த மாதிரி புரட்சித்தலைவி அம்மா சிரிப்பு மூட்டக் கூடாது. இதெல்லாம் ரொம்ப…. அதிகம்.

சென்னை, டிச.1: முல்லைப் பெரியாறைக் காக்க டிசம்பர் 7-ம் தேதி பிரசாரப் பயணமும், டிசம்பர் 8-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும் நடத்த உள்ளதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

சாகும்வரை உண்ணாவிரதம்னு ஏதாவது பண்ணினாலாவது கொஞ்சம் பயனிருக்கும். அத விட்டுட்டு ஆறுமணி நேர உண்ணாவிரதம் இருக்கறதுக்கும் கருணாநிதி கடற்கரைல போட்ட நாடகத்துக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

சென்னை, டிச.1: முல்லைப் பெரியாறு அணை குறித்த விவரங்களை வெள்ளியன்று பிரதமரைச் சந்தித்து அதிமுக எம்பிக்கள் மனு கொடுக்கவுள்ளனர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

அதானே, நம்ம மானில பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பாகுபாடு இல்லாம மொத்தமா சேர்ந்து போய் மனு கொடுத்தா ஒலகம் அழிஞ்சிடுமே. அம்மாவுக்கு தான் உலகத்து மேல எவ்வளவு அக்கறை!

பிற்படுத்தோர் சிறுபான்மையினர் நலத்திட்டங்களை விரைவுபடுத்த அமைச்சர் அறிவுறுத்தல்

இது தினமணியோட ஒரு செய்தித் தலைப்பு. ‘பிற்படுத்தப்பட்டோர்’னு போடறதுக்கு பதிலா ‘பிற்படுத்தோர்’னு போட்டிருக்காங்க. இப்டி அடிக்கடி பிழைகள் வருது, சொன்னா உடனே திருத்திக்கிறாங்க, ஆனா எத்தனை தடவை சொல்றது, இதையெல்லாம் சரி பாக்க மாட்டீங்களா ஐயா? சொன்னாலும் சில சமயம் திருத்திக்கிறது கிடையாது.

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: