கிருமி

27/11/2011

துரோகியை விட எதிரியே மேல்.

புது தில்லி, நவ.26 : மும்பைத் தாக்குதல் நடந்து சனிக்கிழமையுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதில் ஈடுபட்டவர்கள் மீது பாகிஸ்தான் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அப்டி போடு. பல மணி நேர மும்பைத் தாக்குதல் நடந்துக்கிட்டு இருக்கும் போதே அதிரடியா பாகிஸ்தான் மேல சுட்டு, ஊடுருவி, அதிரடி தாக்குதலை தொடங்கியிருந்தா அது அழகு.  எதுக்கெடுத்தாலும் ராஜதந்திர ரீதி, அரசியல் ரீதி, துறை ரீதின்னு பேசிக்கிட்டு எந்த நடவடிக்கையுமில்லாம காலங்கடத்தற உங்களுக்கு பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கலைன்னு சொல்ல வெக்கமாயில்ல? பல்லாயிரம் மைல் தூரத்துல இருக்கற அமெரிக்காக்காரன் பின் லேடனை பாகிஸ்தானுக்குள்ள புகுந்து சாவடிக்கிறான். ஒரு கம்பி வேலிக்கு பின்னாடி இருக்கற நாட்டுல இருக்கற நாட்டுக்குள்ள பட்டவர்த்தனமா ஒளிஞ்சிருக்கற தாவூத் இப்ராகிமை இத்தனை வருஷமா நெருங்க முடியாத அரசுகள் ஆண்மையற்ற, பேடித்தனமான அரசுகளாத்தானே இருக்க முடியும்.

இந்திய அரசைவிட இலங்கை அரசே மேல்: விஜயகாந்த்

சென்னை, நவ.27: கடலோர காவல்படை நீதிமன்றத்தில் அளித்துள்ள பதிலைப் பார்க்கும்போது, இந்திய அரசைவிட இலங்கை அரசே எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

உண்மைதான். துரோகியை விட எதிரியே மேல்.

சென்னை, நவ.27: மாவீரர் தினத்துக்காக அஞ்சலி செலுத்திய விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சியினர் 15 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

இது அப்பட்டமான ஜனநாயக விரோதம். இறந்தவர் எதிரியாயினும் மரியாதை செலுத்துவது நாகரீகம். ஆனால் தன் இனத்திற்காக உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமைகள் மறுக்கப்படுவது இந்தியா மற்றும் இலங்கையில் மட்டுமே காணக்கூடிய சர்வாதிகாரத்தனமாகும்.

சென்னை, நவ. 25: அரசியல் பிரச்னைகளுக்கு ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவை தீர்வாகாது என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர். சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், பஸ் கட்டணம், பால் விலை ஆகியவற்றை தமிழக அரசு அண்மையில் உயர்த்தியது. எதிர்காலத்தில் தமிழகம் பொருளாதார நிலையில் உயர வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

அடக் கொடுமையே! அரசியல் பிரச்சினைகளுக்கு ஆர்ப்பாட்டமும் போராட்டமும் தீர்வாகாதுன்னா, வேறென்ன தீர்வாம்? விலைகளை உயர்த்தினா பொருளாதாரம் உயர்ந்திருமா? இத்தனைக்கும் சென்னைல ஒரு வாரமா வெயில் இல்ல, நல்ல மழை.

தினமணியின் தலையங்கத்தில் ஒரு பகுதி : ஒவ்வொரு காலத்திலும் தணிக்கைத் துறை மிக கவனமாக இருந்திருக்கிறது. எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த “சிவகவி’ திரைப்படத்தில் ஒரு பாடல் வரி, “முகம் அது சந்திர பிம்பமோ, மலர்ந்த சரோஜமோ’ என்றிருந்தது. இந்தப் பாடலைப் பாடும்போது, முகமது சந்திர பிம்பமோ என்று ஒலித்தது. இந்த வரி இஸ்லாமியர்களைச் சங்கடப்படுத்துமோ என்று தணிக்கைத் துறை கருதியபோது, அந்தப் பாடல் வரியை “வதனமே சந்திர பிம்பமோ’ என்று மாற்றினார்கள். இதுபோலப் பல உதாரணங்களைக் காட்ட முடியும். ஏன், “குற்றப்பத்திரிகை’, “காற்றுக்கென்ன வேலி’ போன்ற படங்கள் தணிக்கைக் குழுவில் பட்ட பாட்டை நாடே அறியும்.

நான் முன்பு படித்த ஒரு புத்தகத்தில் இருந்தபடி, அந்தப் பாடலை எழுதிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஒரு கடை நிலை ஊழியர் (தேனீர் பையனோ, அலுவலக உதவியாளரோ) ‘முகமது சந்திர பிம்பமோ, அப்போ அடுத்த வரி ஏசு சூரிய பிம்பமோவா?’ என்று கேட்டதற்கு பின் ‘முகமது’ வதனமானதாம்.

Advertisements

18/09/2011

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பைத்தியம்?

Filed under: அரசியல் — கிருமி @ 8:17 பிப
Tags: ,

திருச்சி: “”சிறையில், வயது முதிர்ந்த வீரபாண்டி ஆறுமுகம் படும் இன்னல்களை எல்லாம் பார்க்கும்போது, இந்த இன்னல்களை, வர இருக்கும் காலத்தில் இன்றைய ஆட்சியாளர்கள் சந்திப்பர்” என, கொலை முயற்சி வழக்கிலிருந்து ஜாமினில் வெளியே வந்த, திருச்செந்தூர் எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

என்னய்யா இது? வயது முதிர்ந்தா தப்பு செஞ்சதெல்லாம் சரியாயிடுமா? கருணாநிதிய உள்ள வச்சதுக்கும் இப்படித்தான் அழுதாங்க. சுத்த பிக்காலித்தனமா இல்ல இருக்கு. பிராயத்துல தப்பெல்லாம் செஞ்சிட்டு அறுவது வயசுல மாட்டுனா வுட்ரணுமா? சொல்லப் போனா இந்த வயசு வரைக்கும் தப்பு செஞ்சதுக்கு, இந்த வயசு முதிர்ச்சிலயும் தப்பு செய்றியான்னு இரட்டை தண்டனை இல்ல கொடுக்கணும்.

ஸ்ரீபெரும்புதூர், செப் 18: அனுமதியின்றி ஆட்டோ பந்தயம் நடத்த முயன்ற 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் புரட்சி பாரதம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் அட்டூழியங்களும் கட்டப் பஞ்சாயத்துகளும் தினமும் அரங்கேறிக் கொண்டுள்ளன. இவர்களை கண்டிக்க எவரும் இல்லாமல் அரசு செலுத்தி வருகின்றனர். இவர்களின் பெரும் பலமே இவர்களின் ஜாதியும் இவர்களின் பின் நிற்கும் கிறித்தவ அமைப்புகளும் தான். அதை வைத்தே அனைவரையும் மிரட்டி வருகின்றனர். இதுவும் அது போன்ற ஒரு கும்பலே.

புதுதில்லி, செப்.18: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருக்கும் ஆமதாபாதுக்கு அதிமுக பிரதிநிதிகளை அனுப்பியது தவறானது என மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மோடியின் உண்ணாவிரதத்தில் பங்கேற்க பிரதிநிதிகளை அனுப்ப அதிமுக முடிவுசெய்ததில் எங்களுக்கு உடன்பாடில்லை. அது தவறான முடிவு என நாங்கள் நினைக்கிறோம் என மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜெயலலிதா மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி.க்களையா அனுப்பினார்? அவர் அனுப்பியது அ.தி.மு.க ஆட்களைத் தானே? இதற்கு எதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் உடன்பாடு தேவைப்படும் ஜெயலலிதாவுக்கு? இவர்கள் சுட்டிக் காட்டுவதெல்லாம் தவறாகுமா? போலி மதச்சார்பின்மை வாதிகள்.

ஈரோடு, செப்.18: காங்கிரஸ் கட்சி கூட்டணியில் தேமுதிகவை சேர்ப்பது தொடர்பாக மேலிடம்தான் முடிவு எடுக்க வேண்டும், எனினும் கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மனதார வரவேற்கிறேன் என ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

விஜயகாந்துக்கு பைத்தியம் பிடித்தால் காங்கிரசுடன் கூட்டு வைப்பார். இளங்கோவனுக்கு பைத்தியம் பிடித்திருப்பதால் தே.மு.தி.க கூட்டணியை எதிர்பார்க்கிறார்.

சென்னை, செப்.18: மத நல்லிணக்கத்திற்காக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருந்தாலும், எங்களால் கடந்த கால சரித்திரத்தை மறந்துவிடமுடியாது என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார்.

ஆமா ஆமா! அது மாதிரிதான் கடந்த கால வரலாறை தமிழக மக்களும் மறக்க மாட்டாங்க. இந்துன்னா திருடன்னு சொன்னீரே, இந்து ஓட்டுக்களால பிச்சை கிடைச்சு மாதிரி பதவிக்கு வந்துட்டு இந்துக்களை திருடன்னு சொன்னீரே, அதெல்லாம் நினைவுக்கு வருது கருணாநிதியாரே!

29/01/2010

அரசியலில் பந்தாடும் கேப்டன்

Filed under: அரசியல் — கிருமி @ 10:51 முப
Tags: ,

நம் அரசியல்வாதிகள் திருந்தவே மாட்டார்கள்.  விஜயகாந்தின் புதிய தொலைக்காட்சியின் பெயர் கேப்டன் டிவியாம்.  லோகோவை அறிமுகப்படுத்துகிறார் ஆங்கிலத்தில்.  லோகோவில் ‘கேப்டன்’ அருகில் பந்து போன்ற உருவம் தெரிகிறது, அசப்பில் பந்து மாதிரியே தான் இருக்கிறது.  நானும் அரசில் விளையாட்டில் இருக்கிறேன் என்று சொல்கிறார் போலும்.  அவரது கட்சியின் வலைத்தளம் முழுதும் ஆங்கிலமே நீக்கமற நிறைந்திருக்கிறது.  தே.மு.தி.க மட்டுமல்ல பெரும்பாலான அரசியல் கட்சிகளின் வலைத்தளங்களில் ஆங்கிலமே கோலோச்சுகிறது.  ம.தி.மு.க தளத்தில் தமிழுக்கு ஓரளவு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.  இணையத்தமிழ் பயனாளர்கள் அனைவரும் ஒருங்குறி எழுத்து வகையைப் பாவிக்கும் போது ஏன் இந்த இழவெடுத்த அரசியல்வாதிகள் ஆங்கிலத்தையும், தமக்கென ஒரு எழுத்துருவையும் கட்டி அழுகிறார்கள் என்று தெரியவில்லை.  தமிழக அரசின் இணைய தளங்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை, ஏகப்பட்ட எழுத்துருக்கள்.  இந்த லட்சணத்தில் செம்மொழி மாநாடு வேறு.

தமிழ், தமிழன் என்று சொல்லிக்கொண்டே தமிழனையும், தமிழையும் கருவறுப்பதில் நம் அரசியல்வாதிகள் அப்படி என்ன இன்பம் காண்கிறார்களோ?

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: