கிருமி

06/09/2012

சிறுபான்மையினருக்கு காவடி தூக்கும் அரசுகள்

http://www.maalaimalar.com/2012/08/21112008/meganthi-rumor-spread-from-sms.html

சமீபத்தில் ரம்ஜானுக்கு சற்று முன் ஒரு மெகந்தி வதந்தி பரவியது. மருதாணி வைக்கும் போது ஒவ்வாமை ஏற்படுவதாகவும் சிலர் இறந்து விட்டதாகவும் வதந்தி பரவியது. இறுதியில் காவல்துறை வதந்தியை பரப்பியவரைக் கண்டு பிடித்தது. அவர் ஒரு முஸ்லீம் இளம்பெண்ணாம், ரம்ஜான் சமயத்தில் அவரைக் கைது செய்வது அவர்களைப் புண்படுத்தும் என்று ரம்ஜான் கழித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று காவல்துறை பொறுத்துக் கொண்டிருக்க முடிவு செய்ததாம்.

செய்திகளைப் பார்த்தால், வதந்தியைப் பரப்பியது ஒரு முஸ்லீம் பெண் என்று மட்டும் செய்திகள் வந்தன. அவர் எந்த ஊர், இடம், பெயர் போன்ற எந்த விவரங்களும் இல்லை. ஏன்? சிறுபான்மையினர் தவறு செய்தால், அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் முறைகளில் இதுவும் ஒன்றா என்ன?

வதந்தியைப் பரப்பியது ஒரு முஸ்லீம் பெண் என்று தெரியவரும் முன், இஸ்லாமியர்களின் புனித ரமலான் கொண்டாட்டங்களை சீர்குலைக்க திட்டமிட்டு விஷமிகள் வதந்தியைப் பரப்புவதாக ஒரு எச்சிக்கலைக் கும்பல் இன்னொரு வதந்தியைக் கிளப்பியது.

ஒரு கேள்வி.

இந்துக்கள் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகை இரவன்று மட்டும் பத்து மணிக்கு மேல் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கட்டுப்படுத்துகிறது காவல் துறை, நீதிமன்ற உத்தரவாம். தீபாவளி அன்று ஒரு இந்து இரவு பத்து மணிக்கு மேல் பட்டாசு வெடித்தால் தீபாவளி கொண்டாட்டம் முடியட்டும் நாளை வந்து விசாரிக்கிறோம் என்று போகுமா காவல் துறை? ஒரு இந்து பட்டாசு வெடிப்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவே. ஆனால் ஒரு முஸ்லீம் வேண்டுமென்றே வதந்தியைப் பரப்பியதற்கு கூட நடவடிக்கை எடுக்க அஞ்சுகிறது காவல் துறை.

இது தான் ஜனநாயகமாம், இது தான் மதச்சார்பின்மையாம், இப்படித்தான் சிறுபான்மையினரின் நலனைப் பாதுகாக்க வேண்டுமாம்.

தூத்தேறி.

Blog at WordPress.com.