கிருமி

15/04/2011

திருந்த மாட்டார்களா அரசியல் வியாதிகள்?

Filed under: அரசியல் — கிருமி @ 7:49 பிப

//சென்னை, ஏப்.15- தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவது தொடர்ந்தால், கடும் போராட்டத்தை நடத்துவோம் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.//

திருந்தவே மாட்டார்களா நம் அரசியல் வியாதிகள்? மீனவர் படுகொலைகள் இன்று நேற்றா நடக்கின்றன? புதிதாக ஒரு நிகழ்ச்சி நடந்திருப்பது போன்றும், அது தொடர்ந்தால் போராட்டம் நடத்துவோம் என்றும் சரடு விடுகிறார் வை.கோ.

இதே நிலையைத்தான் கருணாநிதியும் பின்பற்றி வருகிறார். தமிழர் மீதான தாக்குதல் நடந்தால் அதைப் பிடுங்குவோம் இதைப் பிடுங்குவோம், கூண்டோடு ராஜினாமா செய்வோம் என்று மாய் மாலங்கள் காட்டினார், உண்ணாவிரத நாடகம் நடத்தினார்.

இந்த ஒரே ஒரு ஆள் சாகும் வரை உண்ணாவிரதம் என்று (2009 போர் முடிவுக்கு ஓரிரு மாதம் முன்பாக) இரண்டு மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்திருந்தாலே ஈழத்தில் லட்சம் பேர் உயிர் பிழைத்திருப்பார்கள். இவர்களுக்கு முக்கியமாக இருந்தது, பாராளுமன்ற தேர்தலும் அதைத் தொடர்ந்த அமைச்சர் பதவி பேரங்களும் தான். இவர்கள் திருந்துவார்களோ இல்லையோ, மக்கள் திருந்தியிருக்கிறார்களா என்று தேர்தல் முடிவுகளில் தான் தெரியும்.

Advertisements

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: