கிருமி

14/11/2011

மேலமருதூர் நில மோசடிகள்

இதுவரை தமிழகத்தில் நடந்த நில அபகரிப்பு மோசடிகளிலேயே மிகப்பெரியது, மேலமருதூர் நில மோசடிதான். தூத்துக்குடி அருகிலுள்ள மேலமருதூரில் கருணாநிதி குடும்பத்தினரின் பினாமிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஐந்தாயிரம் அல்லது ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோஸடல் எனர்ஜென் மின் நிறுவனத்தின் நில மோசடிகள் பற்றிய உண்மைகள் வெளியில் வரவே இல்லை. இரண்டாயிரத்து அறுநூறு ஏக்கருக்கும் மேல்  பரப்பளவுள்ள மாபெரும் நிலப்பரப்பை பத்துப் பன்னிரண்டடிக்கு மேல் உயரமுள்ள பிரம்மாண்டமான மதில் சுவர் கட்டி வளைத்துப் போட்டிருக்கிறது இந்த நிறுவனம்.

ஒரு (கீழக்கரை) முஸ்லீம் பெயரில் நிலங்களும், முக்கிய பங்குகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அரசல் புரசலாக இந்த மோசடிகள் குறித்து செய்திகள் வந்த போதிலும், பின்னணியில் உள்ள தயாநிதி மாறன் மற்றும் கருணாநிதி குடும்பத்தினரின் பங்களிப்பு பற்றி எதுவும் செய்திகள் வந்ததாகத் தெரியவில்லை. இவர்தான் இதில் முக்கிய பங்குதாரர் எனப்படுகிறது. இந்த நிறுவன விஷயத்தில், நிலங்கள் வாங்குவது போன்ற பூர்வாங்க வேலைகளையும், ரவுடித்தன அடக்குமுறையையும் குத்தகைக்கு எடுத்திருப்பவர் முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமி.

மேலமருதூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களின் பல நூற்றுக்கணக்கான கிராம மக்களின் விவசாய விளை நிலங்கள் அப்படியே நிலத்தரகர்கள் மூலம் அடிமட்ட விலைக்கு வாங்கப்பட்டும், போலி பத்திர பதிவுகள் மூலமும் கோஸ்டல் எனர்ஜென் நிறுவனத்தின் கைக்கு போய் விட்டது. பலரது சம்மதம் இல்லாமலேயே நிலங்கள் மதில் சுவர் கட்டி வளைக்கப்பட்டு விட்டது. பலரும் நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடுத்திருக்கின்றனர். வழக்கு தொடுத்தவர்கள் மிரப்பட்டு வருகின்றனர். பலரும் உயிருக்கு பயந்து வாழுகின்றனர். சுற்றுப்புறத்தில் வசித்த மக்கள் வழக்கம் போல நிலங்களை ஏமாந்து போய் விற்று விட்டு, இப்போது அந்த நிறுவனத்திலேயே கூலி வேலை செய்து வருகின்றனர்.

நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கவிருக்கும் அந்த நிறுவனம் இயங்கத் தொடங்கும் போது அனேகமாக சுற்றுவட்டாரத்தில் எந்த விவசாய நிலமும் இருக்காது. அந்த நிறுவனம் மூலம் அந்த சுற்று வட்டாரத்தில் நிலத்தின் மதிப்பு எகிறிப்போனதால், பெரும்பாலான விவசாயிகள் பணத்துக்கு ஆசைப்பட்டு விளை நிலங்களை விற்று விட்டனர். அங்கு சுற்றி வரும் நிலத் தரகர்கள் ஒரு விவசாயியையும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. ‘நிலத்தை உடனே விற்று விடு, இல்லாவிடில் போர்ஜரி மூலம் நிலத்தை அபகரித்து விடுவார்கள் / விடுவோம்’ என்று பயமுறுத்தி, மிரட்டி நிலங்களை அபகரித்து விடுகின்றனர்.

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆட்களை வைத்து மிரட்டி பலரிடம் நிலத்தை அபகரித்துள்ளார். ஏக்கர் இரண்டு லட்சத்திற்கு பேசி விட்டு பத்திரப் பதிவின் போது கையெழுத்து போட்டுமுடிந்த பின் பணம் தருவதாகப் பேசி பத்தாயிரம் மட்டும் முன் பணம் தந்து விடுவர். பத்திரப்பதிவு முடிந்த உடன், அங்கேயே ஆட்களை வைத்து மிரட்டி, ‘உயிரோடு ஊர் போய்ச் சேர்’ என்று புத்திமதி சொல்லி (?) பத்திரமாக வழியனுப்பி வைத்து விடுவர்.

மேலமருதூருக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் கிட்டத்தட்ட ஐம்பது அல்லது நூறு ஏக்கர் நிலத்தை இப்படி மிரட்டலுக்கு பயந்து ஐ.பெரியசாமியிடம் தாரை வார்த்து ஏமாந்திருக்கிறார், பாவம். பெரும்புள்ளியான அவருக்கே இந்தக்கதி என்றால், சாதாரண சம்சாரிகள் எப்படி ஏமாந்திருப்பார்கள்!

வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் உள்ளிட்ட எவரும் இதையெல்லாம் பற்றி மூச்சு கூட விடவில்லை, காரணம்?

ஸ்டாலின் ஒரு வருடம் முன்பே தூத்துக்குடி வந்த போது இரண்டு மூன்று தடவை இந்த நிறுவனத்தினுள் விசிட் அடித்து விட்டார். வேலை வெட்டி இல்லாமல் சும்மா சுற்றிப்பார்க்கவா போயிருப்பார்?

நக்கீரன், ஜூ.வி. குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற ஏதோ ஒரு பத்திரிகையில் மூன்றாண்டுகளுக்கு முன் இது பற்றி பரபரப்பாக சிறிது எழுதினார்கள். அப்புறம் அவர்களை ‘கவனித்த’ பின், அந்த சந்தடியும் அடங்கி விட்டது.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபின் அறிவித்த நில மோசடி தனிப்பிரிவில் கட்டுக்கட்டாக புகார்கள் குவிந்துள்ளன. காவல் நிலையங்களிலேயே நிலத்தை பறிகொடுத்தவர்களுக்கும் கோஸ்டல் எனர்ஜெனுக்கும் இடையில் காவல் அதிகாரிகளே கட்டைப் பஞ்சாயத்து அல்லது புரோக்கர் வேலை செய்கின்றனர். அவர்களுக்கும் அதில் கமிஷன், நாடு உருப்பட்ட மாதிரி தான்.

Leave a Comment »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

தமிழில் மறுமொழி இடவும். தமிழில் உரையாடுவோம், எழுதுவோம். நன்றி.

Blog at WordPress.com.