கிருமி

30/01/2010

ஆலேலூயா…… ஆளே இல்லியா

சென்னை முகப்பேர் பகுதியை அடுத்து அமைந்துள்ளது நொளம்பூர் பகுதி.  மதுரவாயல், முகப்பேர், நெற்குன்றம் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளது இப்பகுதி.  நொளம்பூர் கிராமம் என்று குறிக்கப்படும் இப்பஞ்சாயத்து பகுதியில் சில ஆண்டுகளாக பெரிய அளவில் கிறித்துவ மதமாற்ற மோசடி நடந்து வருகிறது.  சில ஆண்டுகள் முன்பு வரை, இப்பகுதி ஒரு கிராமமாகவே இருந்தது.  பின்னர் டிஏபிசி, விஜிஎன் போன்ற அடுக்கக கட்டுமான நிறுவனங்கள் இங்கு அடுக்கக வீடுகள் கட்டித்தர ஆரம்பித்து, இப்போது பெரிய அளவில் அங்கு அடுக்ககக் குடியிருப்புகள் ஆயிரக்கணக்கில் முளைத்து விட்டன.  மதமாற்றத்தில் ஈடுபடும் கிறித்தவக் கும்பல்கள் ஆங்காங்கு சர்ச்சுகளை நிறுவி, பெரிய அளவில் மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றன.  நொளம்பூரில் பூர்விகமாக குடியிருந்தவர்களும், அங்கு இடையில் வந்தேறியவர்களும் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமலேயே வெகுகாலமாக இருந்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்புதான் அல்லேலுயா கும்பல்களின் ஆள் பிடிக்கும் பணி தொடங்கியது.  அப்போது தான் தற்செயலாக அடுக்கக வீடுகளும் முளைக்க ஆரம்பித்தன.  இப்பகுதியில் டிஏபிசி என்னும் அடுக்கக கட்டுமான நிறுவனம் (கிறித்தவருக்கு சொந்தமானது) மட்டும் மூவாயிரத்து ஐநூறு முதல் நான்காயிரம் பிளாட்டுகள் வரை சமீப ஆண்டுகளில் கட்டிக் கொடுத்துள்ளது, எனில் எத்தனை பேர் அங்கு வேலை பார்த்திருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.

இங்கிருந்த பாமர மக்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்பும் அடுக்ககக் கட்டுமான நேரத்தில் கிடைத்தது.  இங்கிருந்த பாமர மக்களோ படிப்பறிவில்லாதவர்கள், அவர்களுக்கு தற்செயலாக அமைந்த வாய்ப்புகளைப் பாருங்கள்.  கட்டிட வேலையில் ஈடுபடுபவர்களுக்கு (பெரும்பாலானோர் ஆந்திரர்கள்) வடை, தேனீர், சாப்பாடு விற்றனர், தண்ணீர் விற்றனர், செல்பேசிகளுக்கு ரீசார்ஜ் அட்டைகள் விற்றனர்.  கட்டிடங்கள் கட்டி அடுக்கங்களில் மக்கள் குடியேறியதும் வேலை வாய்ப்பு இன்னும் பெருகியது.  குடி நீர் கேன் விற்பனை, காவலாளி வேலை, வீடுகளை சுத்தம் செய்யும் வேலை, பால் மற்றும் பால் பாக்கெட் விற்பனை, எலெக்டிரீசியன், பிளம்பர், கார்கள் சுத்தம் செய்ய, தினசரி செய்தித்தாள் போடுதல், தச்சர், வண்ணம் பூசிகள், கருமான்கள், குப்பை அள்ளும் ஒப்பந்தங்கள், கட்டிட வேலை, மின்னாள், ஓட்டுனர், ஆட்டோத் தொழில் என சம்பாதிக்க பல வழிகள் பிறந்தன.  மக்களும் ஓரளவு வசதி பெற்றனர்.

கணிசமான அளவில் மதமாற்றமும் நடைபெற்று முடிந்த நிலையில் நிகர லாபம், கிறித்துவ அமைப்புகளுக்கும், அவற்றை நடத்துபவர்களுக்கும் கிடைத்தது.  ஆம், இப்போது வசதியாக இருக்கும் மதம் மாறிய சமீபத்திய கிறித்துவர்களைக் கை காட்டி, பணத்தாசை காட்டி மற்றவர்களையும் மதம் மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.  மதம் மாறினார்களாம், ஏசு நல்வழி காட்டினாராம்.  எப்படி கதை?  காக்கை அமரப் பலாப்பழம் விழுந்த கதை தான்.  இந்த கிறித்துவ அமைப்புகளை நடத்துபவர்கள் அயல் நாடுகளிலிருந்தும் மிஷன்களில் இருந்தும் கொழுத்த லாபம் சம்பாதித்தனர், இது விமரிசையாகத் தொடர்கிறது.

சில சமயம் நள்ளிரவில் கூட பேயோட்டுதல், புனித ஆவிகளின் மிட்நைட் மசாலா என ஒரே கூக்குரல் மயமாக இருக்கிறது நொளம்பூர்.  இவர்கள் பிளிறும் ஆலேலுயா………. சத்தம் ஆளே இல்லியா என்று ஆள்பிடிப்பதை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

Advertisements

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: